பங்களாதேஷ் கடற்படை தளபதி இலங்கை கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2022 ஜனவரி 18 ஆம் திகதி இலங்கை வந்துள்ள பங்களாதேஷ் கடற்படை தளபதி அட்மிரல் எம் ஷஹீன் இக்பால் (Admiral, M Shaheen Iqbal) இன்று (2022 ஜனவரி 19) கடற்படைத் தலைமையகத்தில் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தார்.

பங்களாதேஷ் கடற்படைத் தளபதி அட்மிரல் எம் ஷஹீன் இக்பால் அவர்களை கடற்படைத் தலைமையகத்துக்கு கடற்படையின் பிரதிப் பிரதானி மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் உபுல் டி சில்வாவினால் வரவேற்றதுடன், கடற்படை மரபுகளுக்கு ஏற்ப அவருக்கு விசேட கௌரவ மரியாதையும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடற்படைத் தளபதி தனது பங்களாதேஷ் சக அதிகாரியை அன்புடன் வரவேற்று, வருகை தந்த கடற்படைத் தளபதிக்கு மேலாண்மை வாரியத்தை அறிமுகப்படுத்தினார்.

இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, பங்களாதேஷ் கடற்படைத் தளபதி மற்றும் இலங்கை கடற்படைத் தளபதி ஆகியோர், பரஸ்பர நலன்கள் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான நீண்டகால நட்புறவுகள் மற்றும் இருதரப்பு விவகாரங்கள் குறித்து சுமுகமான கலந்துரையாடலைத் தொடர்ந்து, நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொண்டனர்.

அட்மிரல் எம். ஷாஹீன் இக்பால் அவர்கள் இலங்கை கடற்படைத் தளபதி மற்றும் கடற்படை முகாமைத்துவ சபையுடன் குழுப் புகைப்படத்திற்கு முகம் கொடுத்ததுடன், கட்டளைத் தளபதி அலுவலகத்தில் சிறப்பு விருந்தினர்களுக்கான நினைவுப் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, பங்களாதேஷ் கடற்படைத் தளபதி கௌரவ. பிரதமர், மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர், ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன மற்றும் பாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா. உட்பட கிழக்கு மற்றும் தெற்குப் கடற்படை பகுதி தளபதிகளைச் சந்திக்கவுள்ளார் மற்றும் தீவில் தங்கியிருக்கும் போது திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமிக்கு விஜயம் செய்வார்.