71வது கடற்படை தினத்தை முன்னிட்டு கடற்படையினருக்கு ஆசீர்வாதமாக கொட்டாஞ்சேனை புனித லுசியா தேவாலயத்தில் தேவ வழிபாடுகள்
2021 டிசம்பர் 09 ஆம் திகதி நடைபெற உள்ள இலங்கை கடற்படையின் 71 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்படுகின்ற சமய நிகழ்ச்சிகள் தொடரில் கிறிஸ்தவ சமய வழிபாடுகள் 2021 நவம்பர் 23 அன்று கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதன்னவின் தலைமையில் கொழும்பு உதவி ஆயர், வண. கலாநிதி அன்டன் ரஞ்சித் தேரர் மற்றும் ஏனைய குருமார்களின் பங்களிப்புடன் கொழும்பு புனித லுசியா தேவாலயத்தில் இடம்பெற்றது.
ශ්இலங்கை கடற்படையின் 71வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படையினருக்கு ஆசி வழங்கும் சமய நிகழ்ச்சிகள் தொடர் தொடக்கும் வகையில், கஞ்சுக பூஜை மற்றும் கொடி ஆசீர்வாத நிகழ்வு 2021 நவம்பர் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் ருவான்வேலி மகா சே ரதுன் மற்றும் ஜெயஸ்ரீ மகா போதி முன்றலில் இடம்பெற்றது. இதன்படி, இந்த சமய நிகழ்ச்சிகள் தொடரின் கடற்படைக்கு ஆசி வழங்கும் சமய வழிபாடு 2021 நவம்பர் 23 ஆம் திகதி கொழும்பு புனித லுசியா தேவாலயத்தில் நடத்தப்பட்டதுடன் கிறிஸ்தவ சமய வழிபாடுகளால் நாட்டிற்காக தமது உயிரை தியாகம் செய்த மற்றும் அங்கவீனமாகிய மற்றும் தற்போது சேவையாற்றும் கடற்படை வீரர்களுக்காகவும், அவர்களது குடும்பத்தினர்களுக்கும், முழு கடற்படையினருக்கும் ஆசிகள் வழங்கப்பட்டன.
தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களின் படி மேற்கொள்ளப்பட்ட இந்த சமய வழிபாடுக்காக கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்ன, கடற்படை துனை தளபதி ரியர் அட்மிரல் வை.என். ஜயரத்ன, கடற்படை கட்டளை தளபதிகள், கடற்படை சேவா வனிதா பிரிவின் செயற்குழு உறுப்பினர்கள், பணிப்பாளர் நாயகங்கள், கடற்படை கிறிஸ்தவ சபையின் தலைவர், கொமடோர் பிரசாந்த அந்தோனி, கடற்படை தலைமையகத்தின் மற்றும் மேற்கு கடற்படை கட்டளையின் அதிகாரிகளும் மாலுமிகளும் கலந்து கொண்டனர்.