சந்தஹிருசேய தூபி மகா சங்கத்தினரிடம் ஒப்படைப்பு
அநுராதபுரம் புனித நகரத்தில் நிர்மாணிக்கப்பட்ட சந்தஹிரு சேய தூபி மகா சங்கத்தினரிடம் ஒப்படைக்கும் நிகழ்வு அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் 2021 நவம்பர் 18 ஆம் திகதி மகா சங்கத்தினரின் ஆசிர்வாதங்களுக்கு மத்தியில் நடைபெற்றதுடன் இந்த நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.
மூன்று தசாப்த காலங்களாக இடம்பெற்ற கொடூர பயங்கரவாதத்தை ஒழித்து தாய்நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காக இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களம் வீரர்கள் செய்த உயிர் தியாகங்களையும் உன்னத சேவையையும் பாராட்டுவதற்காக 5வது நிறைவேற்று ஜனாதிபதி மற்றும் தற்போதைய பிரதமருமான கௌரவ மகிந்த ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் சந்தஹிரு சேயவின் நிர்மாணப் பணிகள் 2010 நவம்பர் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. பின்னர், தற்போதைய ஜனாதிபதியும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரையின் பேரில், தற்போதைய பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் தூபியின் தற்போதைய கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்படி, கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த சந்தஹிருசேய தூபியின் கோபுரத்தின் மற்றும் சூடாமாணிக்ய திறப்பு விழா 2021 நவம்பர் 18 ஆம் திகதி பிற்பகல் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் ஜயபிரித் ஓதுதல் மத்தியில் நடைபெற்றது. மேலும், தாது கரண்டுவ நகைகளால் அலங்கரித்தல், தொலொஸ்மஹே பஹானை திறப்பு, சம்புத்த சாசனத்துடன் சந்தஹிருசேய ஒப்படைப்பு மற்றும் ஸ்தூபிக்கு விளக்கேற்றுதல் (அலோக பூஜை) ஆகிய பல சிறப்புச் செயல்களிலும் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் ஈடுபட்டார்.
முப்படை மற்றும் சிவில் பாதுகாப்புப் படையின் தலைமையில் நிர்மாணிக்கப்பட்ட இந்த, சந்தஹிருசேய தூபிக்கு தேவையான செங்கல் தயாரிப்பில் இருந்து தூபியின் நிர்மாணங்களுக்கும் பிரதான நுழைவாயில்களை உள்ளடக்கிய நிலப்பரப்பு, வாகன நிறுத்துமிடம். அணுகல் சாலைகள் ஆகிய உயர் தரத்தில் நிர்மானிப்பதுக்காக கடற்படை குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது.
சந்தஹிருசேய தூபி நிர்மாணிப்பதற்காக முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளின் மேற்கொண்ட இந்த சிறப்புமிக்க செயலை பாராட்டிய அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு இந்த விசேட சந்தர்ப்பத்தில் வெகுமதிகளையும் சான்றிதழையும் வழங்கினார்.
மூன்று அத்தியாயங்களின் மகா சங்கத் தேரர் மற்றும் அனு நாயக்க தேரர்கள் உட்பட மகா சங்க உறுப்பினர்கள், பிற மதங்களைச் சேர்ந்த மதப் பிரமுகர்கள், கௌரவ. பாராளுமன்ற சபாநாயகர், அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தூதுவர்கள், அரச அதிகாரிகள், பாதுகாப்பு செயலாளர், ஓய்வுபெற்ற மூத்த முப்படை அதிகாரிகள், பாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும் இராணுவத் தளபதி, விமானப்படைத் தளபதி, பொலிஸ் மா அதிபர் , சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், ஆயுதப் படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள், போர் வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள், கௌரவ அதிதிகள் மற்றும் பக்தர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.