கடற்படையினர் நினைவுகூறும் விழா கடற்படை தளபதி தலைமையில் வெலிசரையில் இடம்பெற்றது
ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாக நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத்தை தோற்கடித்ததற்காக யுத்ததின் போது உயிர் தியாகம் செய்த கடற்படையினர் நினைவு கூறும் விழா இன்று (மே 19) வெலிசரவுள்ள படையினர் நினைவுச்சின்னம் அருகில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன தலமையில் இடம்பெற்றன.
நாட்டின் ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காக ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாக நாட்டில் இடம்பெற்ற எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக 1160 கடற்படை வீரர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்ததுடன் 517 கடற்படை வீரர்கள் முடக்கப்பட்டுள்ளனர். அங்கு, கடற்படைத் தளபதி படையினர் நினைவுச்சின்னத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தி உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு தனது நன்றியை வெளியிட்டார். மேலும், கடற்படைத் தளபதி வெலிசர கடற்படை போர் வீரர்கள் பராமரிப்பு மையத்தில் (Anchorage Naval Care Center) இருக்கும் ஊனமுற்ற கடற்படை போர் வீரர்களையும் பார்வையிட்டார். இந் நிகழ்வுக்காக கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவும் கழந்து கொண்டுள்ளார்.
தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களின் படி ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் கடற்படையின் தலைமை அதிகாரி, ரியர் அட்மிரல் ருவன் பெரேரா, மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் உபுல் டி சில்வா, வெலிசர கடற்படை வளாகத்தின் கட்டளை அதிகாரி கமடோர் ரோஹித அபேசிங்க உட்பட கடற்படை தலைமையகம் மற்றும் மேற்கு கடற்படை கட்டளையின் குறைந்த எண்ணிக்கையிலான மூத்த மற்றும் இளைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.