கடற்படை வண்ண விருதுகள் - 2021 பிரம்மாண்டமாக நடைபெற்றது

இலங்கை கடற்படை விளையாட்டு வாரியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்படை வண்ண விருதுகள் – 2021 நிகழ்வு இன்று (2021 மார்ச் 09) கடற்படைத் தளபதி மற்றும் கடற்படை விளையாட்டு வாரியத்தின் தலைவர் வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலமையில் அத்திடிய ஈகள்ஸ் லேக்ஸைட் விழா மண்டபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

கடந்த 2017, 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கட்டளை, பாதுகாப்பு சேவைகள், தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் 54 விளையாட்டு நிகழ்வுகளின் சிறந்து விளங்கிய 39 விளையாட்டு நிகழ்வுகளில் கடற்படை விளையாட்டு வீரர்களுக்கு இங்கு வண்ணங்கள் வழங்கப்பட்டன.

அதன்படி, நீச்சல், வில்வித்தை, தட மற்றும் கள நிகழ்வுகள், பூப்பந்து, பேஸ்பால், கூடைப்பந்து, கடற்கரை கைப்பந்து, உடற்கட்டமைப்பு, குத்துச்சண்டை, கேனோயிங், கேரம், செஸ், கிரிக்கெட், சைக்கிள் ஓட்டுதல், கால்பந்து, கோல்ஃப், கை பந்து, ஹாக்கி, ஜூடோ, கப்படி, கராத்தே, உயிர் பாதுகாப்பு, மோட்டார் சைக்கிள் பந்தயம், படப்பிடிப்பு, நெட்பால், ரோயிங், ரக்பி, படகோட்டம், ஸ்குவாஷ், மேச பந்து, டைகொண்டோ, டென்னிஸ், டிரையத்லான், இழுபறி, கைப்பந்து, பளுதூக்குதல், மல்யுத்தம் மற்றும் வுஷு ஆகிய விளையாட்டு நிகழ்வுகளை பிரதிநிதித்துவப்படுத்தி கடற்படைக்கு பெருமை சேர்த்து 541 தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள் வென்ற விளையாட்டு வீரர்கள் இவ்வாரு வண்ண பரிசுகள் பெற உள்ளனர். மற்றும் தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களின்படி இன்று 250 விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமே வண்ண பரிசுகள் வழங்கப்பட்டது. எதிர்காலத்தில் வண்ணங்களைப் பெறும் மற்ற வீரர்களுக்கு பொருத்தமான வண்ணங்களை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடற்படை விளையாட்டு வாரியத்தால் கடற்படையின் விளையாட்டுகளுக்காக வழங்கப்பட்ட வசதிகள் மற்றும் வழிகாட்டுதல்களின் மூலம் அதிகபட்ச பலன்களைப் பெற்று கடற்படையின் நற்பெயரை அதிகரிக்க சிறந்த சாதனைகளை அடைந்த கடற்படை விளையாட்டு வீரர்களை இங்கு பாராட்டப்பட்டன. மற்றும் அவர்களுக்கு பயிற்சியளித்த பயிற்சியாளர்களையும் பாராட்டி கடற்படைத் தளபதி சிறப்பு பரிசைகள் வழங்கினார்.

குறித்த வண்ண விருதுகள் வழங்கும் விழாவில் டைகொண்டோ விழையாட்டில் சிறந்த திறமையை வெலிகாட்டி 2019 ஆம் ஆண்டில் தென் கொரியாவில் நடைபெற்ற உலக கொரிய தூதர் கோப்பை போட்டித்தொடரில் தங்கப் பதக்கத்தையும், 2019 இல் நேபாளத்தில் நடந்த 13 வது தெற்காசிய விளையாட்டுப் போட்டித்தொடரில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களையும் பெற்ற லெப்டினன்ட் ஜே.ஏ.நிஷ்சங்க 2019 ஆம் ஆண்டில் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை பெற்றார்.

தைபேயில் நடைபெற்ற 2017 தைபே சிட்டி ஆசிய கிராண்ட் பிரிக்ஸ் போட்டித்தொடரில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டு தங்கப் பதக்கங்களையும், இந்தியாவில் நடைபெற்ற 2017 ஆசிய சாம்பியன்ஷிப் போட்டித்தொடரில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கத்தையும், ஜகர்த்தாவில் நடைபெற்ற 2018 ஆசிய விளையாட்டுப் போட்டித்தொடரில் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கத்தையும் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கத்தையும் வென்ற பெண் கடற்படை வீரர் ஜீ.ஏ.டீ அபேரத்ன 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான கோப்பையை கடற்படைத் தளபதியிடம் பெற்றார்.

மேலும், இங்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்காக கட்டளைகளுக்கிடையிலான ஒட்டுமொத்த சாம்பியன்களுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன, 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்காக மேற்கு கடற்படை கட்டளையும் 2018 ஆம் ஆண்டிற்காக பயிற்சி கட்டளையும் கோப்பைகள் பெற்றது.

விளையாட்டு மூலம் உடல் மற்றும் மன வளர்ச்சியால் தன்னம்பிக்கை, பொறுமை, அர்ப்பணிப்பு, சகிப்புத்தன்மை, உடல்நலம் மற்றும் உயர் ஒழுக்கம் ஆகிய குணங்களைக் கொண்ட ஒரு ஆற்றல்மிக்க நபரை உருவாக்குகிறது. அதன்படி, கடற்படையின் செயல்பாடுகளை திறமையாக செய்யக்கூடிய அதிக ஒழுக்கமான, உடல் மற்றும் மனரீதியான மாலுமிகளை உருவாக்குவதன் மூலம் விளையாட்டை மேம்படுத்துவதை கடற்படை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கோவிட் 19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட சுகாதார ஆலோசனைகள் மற்றும் நடைமுறைகளை பின்பற்றி கடற்படை விளையாட்டு வாரியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கடற்படை வண்ண விருதுகள் - 2021 நிகழ்வுக்காக கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்ன, தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க, துணைத் தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் ருவன் பெரேரா, மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் சுதர்ஷன உட்பட கடற்படை கட்டளைகளின் தளபதிகள் கடற்படை மேலாண்மை வாரியத்தின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட மூத்த மற்றும் இளைய அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் கலந்து கொண்டனர்.