பாகிஸ்தானில் இடம்பெற்ற “அமான் 2021” பலதரப்பு பயிற்சியில் இலங்கை கடற்படை கப்பல் கஜபாஹு பங்கேற்பு

பாகிஸ்தான் கடற்படை 'சமாதானத்திற்காக ஒன்றாக' (Together for Peace) என்ற கருப்பொருளின் கீழ் ஏழாவது முறையாக ஏற்பாடு செய்கின்ற பலதரப்பு அமான் (AMAN 2021) கடற்படை பயிற்சி 2021 பிப்ரவரி 12 அன்று பாகிஸ்தான், கரச்சியில் உள்ள கடற்படை கப்பல்துறை வளாகத்தில் தொடங்கியது. இந்த கடற்படை பயிற்சியில் இலங்கை கடற்படைக் கப்பல் கஜபாஹு பங்கேற்றது.

இலங்கை கடற்படைக் கப்பல் கஜபாஹு கொழும்பு துறைமுகத்திலிருந்து பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்திற்கு 2021 பிப்ரவரி 5 ஆம் திகதி பாரம்பரிய விழாக்களுக்கு மத்தியில் சென்றதுடன் பிப்ரவரி 16 ஆம் திகதி வரை நடைபெற்ற அமான் (AMAN 2021) பலதரப்பு கடற்படைப் பயிற்சி சுமார் 45 நாடுகளின் பங்கேற்புடன் நடைபெற்றது.

அதன்படி, இந்த கடற்படை பயிற்சியின் துறைமுக கட்டம் (Harbour phase) 2021 பிப்ரவரி 12 முதல் 14 வரை பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தில் நடைபெற்றது, அங்கு பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் எம் அம்ஜத் கான் நியாசி (M Amjad Khan Niazi) இலங்கை கடற்படை கப்பல் கஜபாஹுவை கண்காணித்தார். இந்த கடற்படை பயிற்சியின் கடல் கட்டம், பிப்ரவரி 15 மற்றும் 16 ஆகிய திகதிகளில் வட அரேபிய கடலில் நடந்தது. கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகள், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் மனிதாபிமான நிவாரண நடவடிக்கைகளின் அடிப்படையில் பிராந்திய கடல்சார் பாதுகாப்புக்கு வழக்கமான மற்றும் பாரம்பரியமற்ற அச்சுறுத்தல்கள் நிர்வகிக்க, ஒரு கருத்து, உத்திகள், தொழில்நுட்ப அறிவு மற்றும் முறைகள் உள்ளிட்ட பல பயிற்சிகள் இந்த பயிற்சியின் போது நடத்தப்பட்டது. மேலும், இந்த பயிற்சிக்கு இணையாக பிப்ரவரி 13 முதல் 15 வரை “Development of Blue Economy under a Secure and Sustainable Environment: A Shared Future for Western Indian Ocean Region” என்ற கருப்பொருளின் கீழ் சர்வதேச கடல்சார் மாநாடொன்று பாகிஸ்தான் கடற்படை தலைமையில் நடைபெற்றதுடன் குறித்த மாநாட்டில் இலங்கை கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்தி கொடி அதிகாரி வெளியீட்டு கட்டளை ரியர் அட்மிரல் பண்டார ஜெயதிலக கலந்து கொண்டார்.

பிப்ரவரி 16 ம் திகதி அமான் (AMAN 2021) பலதரப்பு கடற்படைப் பயிற்சியின் உத்தியோகபூர்வ முடிவைத் தொடர்ந்து பிப்ரவரி 17 மற்றும் இன்று (பிப்ரவரி 18) பாகிஸ்தான் கடற்படைக்கும் இலங்கை கடற்படைக்கும் இடையிலான இரண்டு நாள் இருதரப்பு கடற்படைப் பயிற்சியிலும் இலங்கை கடற்படை கப்பல் கஜபாஹு பங்கேற்றுள்ளது.

வெளிநாட்டு கடற்படையினருடன் இத்தகைய கடல்சார் பயிற்சிகளில் பங்கேற்பது இலங்கை கடற்படைக்கு பிராந்திய கடற்படைகளுடன் பரஸ்பர ஒத்துழைப்பை வளர்த்துக் கொள்ளவும், கடற்படை நடவடிக்கைகள், பரிமாற்ற உத்திகள் மற்றும் அனுபவங்கள் குறித்த புதிய அறிவைப் பரிமாறிக்கொள்ளவும், புதிய சவால்களை அடையாளம் காணவும், கூட்டாக தீர்வுகளைக் கண்டறியவும் உதவுகிறது.

மேலும், கோவிட் 19 உலகளாவிய தொற்றுநோயை எதிர்கொண்டு வழங்கிய சுகாதார வழிகாட்டுதல்களின்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கடற்படைப் பயிற்சிகள் இலங்கையின் கடல் மண்டலத்தின் கடல் பாதுகாப்பைப் பராமரிக்கவும் உதவும்.