வெற்றிகரமான விஜயத்தின் பின் ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் கப்பல்கள் தாயாகம் திரும்பின
2020 செப்டெம்பர் 23 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ள ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் கப்பல்கள் இலங்கை கடற்படையின் கப்பல்களுடன் நடத்திய வெற்றிகரமான கடற்படைப் பயிற்சிக்குப் பின்னர் 2020 செப்டம்பர் 24 ஆம் திகதி தீவில் இருந்து புறப்பட்டன./p>
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு வருகைதந்த ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் 'காகா' மற்றும் 'இகசுசி' ஆகிய கப்பல்கள் 2020 செப்டம்பர் 24 ஆம் திகதி இலங்கை கடற்படையின் கஜபாஹ கப்பல், துரித தாக்குதல் படகுகள் மற்றும் கடலோர காவல்படை ரோந்து கப்பல்களுடன் மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான கடல் பகுதியில் வெற்றிகரமான பயிற்சியொன்று நடத்தியது. இந்த பயிற்சி இரு தரப்பினருக்கும் இடையில் கடற்படை அறிவு மற்றும் அனுபவத்தைப் பரிமாறிக்கொள்வதோடு இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பை வளர்க்கவும் உதவியது.
அதன்படி, வெற்றிகரமான உத்தியோகபூர்வ விஜயத்தின் பின் தீவை விட்டு வெளியேறும் ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் கப்பல்களுக்கு இலங்கை கடற்படையினரால் கடற்படை மரபுக்களுக்கமைய பிரியாவிடையளிக்கப்பட்டன.