செய்தி வெளியீடு


“பனமா கொடி கொண்ட New Diamond எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ” என்ற தலைப்பில் 2020 செப்டம்பர் 05 அன்று 1930 மணிக்கு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு தொடர்பானது.

இலங்கை கடற்படை மற்றும் பிற பங்குதாரர்கள் ரசாயனங்கள் மற்றும் தண்ணீரை தொடர்ந்து பயன்படுத்தி பாதிக்கப்பட்ட கப்பலின் தீயணைப்பு மற்றும் குளிரூட்டல் நடவடிக்கைகள் மிகவும் திறமையாக மேற்கொள்கின்றனர். நிலத்திலிருந்து 40 கடல் மைல் (சுமார் 74 கி.மீ) தொலைவில் மேற்கொள்ளப்படுகின்ற இந்த நடவடிக்கைகாக முந்தைய நாள் (செப்டம்பர் 5, 2020) நள்ளிரவில் ஓஷன் பிலிஸ் (Ocean Bliss) டக் படகும் இணைந்தது.

2020 செப்டம்பர் 5, இரவு, பாதிக்கப்பட்ட கப்பல் உள்ள கடல் பகுதி கரடுமுரடானது மற்றும் கடல் காற்றின் வேகத்தில் அதிகரிப்பு இருந்தது. எவ்வாறாயினும், தீ விபத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பேரழிவு நிவாரண நடவடிக்கை தொடர்ந்தது. இன்றைய நாள் முழுவதும் ரசாயனங்கள் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி இந்த தீயை கட்டுப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கிரேக்கத்தின் ஏதென்ஸில் உள்ள நியூ டயமண்ட் கப்பலின் வணிக உரிமையாளரான New Shipping Limited நிறுவனம் சிங்கப்பூரை தளமாகக் கொண்ட SMIT Singapore Pte Ltd சர்வதேச நிறுவனத்தை அதன் பேரழிவு நிவாரண பங்காளராக நியமித்துள்ளது. இந்நிறுவனம் தற்போது கச்சா எண்ணெய் பேரழிவு உபகரணங்கள் மற்றும் நிபுணர்களை எம்டி நியூ டயமண்ட் கப்பலுக்கு அனுப்புகிறது. தற்போது பாதிக்கப்பட்ட கப்பலுடன் இருக்கும் டி.டி.டி ஒன் (TTT One), இதுபோன்ற பேரழிவுகளைச் சமாளிக்கக்கூடிய மீட்புத் தலைவர் உட்பட ஒரு குழுவைக் கொண்டுள்ளது. இதற்கிடையில், கச்சா எண்ணெய் கப்பல்களைக் கையாளக்கூடிய இரண்டு பெரிய டக் படகுகள் TTT One படகுடன் சேர ஏற்கனவே சிங்கப்பூர் மற்றும் மொரீஷியஸ் நாடுகளை விட்டு வெளியேறிவிட்டது. மேலும், SMIT Singapore Pte Ltd நிருவனம் நபர்கள் மற்றும் பொருட்கள் கொண்டு வரப்படுவது குறித்து இலங்கை கடற்படைக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இது தொடர்பாக இலங்கை கடற்படை உதவ தயாராக உள்ளது.

மேலும், மீட்பு நடவடிக்கை, பேரழிவு மதிப்பீடு மற்றும் சட்ட ஆலோசனை ஆகியவற்றில் நிபுணத்துவம் வாய்ந்த 10 பிரிட்டிஷ் மற்றும் நெதர்லாந்து வல்லுநர்கள் இன்று காலை தீவுக்கு வந்து, கப்பலின் பேரழிவு மேலாண்மை குறித்து விசாரித்து எதிர்கால நிகழ்வுகள் எவ்வாறு திட்டமிடப்பட வேண்டும் என்பது குறித்த பரிந்துரைகளை வழங்குவார்கள்.மேலும், இலங்கை துறைமுக ஆணையத்தின் தலைமை தீயணைப்பு அதிகாரி உட்பட ஒரு குழு இன்று (2020 செப்டம்பர் 06,) கப்பலை ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 20 பணியாளர்களுக்கு விபத்துக்குப் பின்னர் முதல் தடவையாக, தங்கள் குடும்பத்தினரை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள தேவையான வசதிகள் வழங்க கடற்படை திட்டமிட்டுள்ளது.

தற்போது இலங்கை கடற்படையின் மூன்று (03) கப்பல்கள், இந்திய கடலோர காவல்படையின் ஐந்து (05) கப்பல்கள், இந்திய கடற்படையின் ஒரு போர்க்கப்பல், ஹம்பாந்தோட்டா சர்வதேச துறைமுகக் குழுவின் (Hambanthota International Port Group) இராவணா மற்றும் வசம்ப டக்

படகுகள், பாதிக்கப்பட்டுள்ள கப்பலின் வெளிநாட்டு நிறுவனம் தயாரித்த ALP Winger டக் படகு, ஆழ்கடல் தீயணைப்பு வீரர்கள் கொண்ட டி.டி.டி 1 (TTT One) டக் படகு மற்றும் ஓஷன் பிலிஷ் (Ocean Bliss) டக் படகு இந்த தீயணைப்பு நடவடிக்கைக்கு ஏற்கனவே தீவிரமாக பங்களிப்பு செய்து வருகிறது. மேலும், இலங்கை கடற்படையின் மூன்று (03) துரித தாக்குதல் படகுகள் மற்றும் இலங்கை கடலோர காவல்படைக்கு சொந்தமான இரண்டு (02) கப்பல்கள் இந்த நடவடிக்கைக்கு விநியோக கப்பல்களாக நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும், இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ஒரு டோர்னியர் விமானம் இன்று மத்தல மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு பாதிக்கப்பட்ட கப்பல் தற்போது உள்ள கடல் பகுதியை கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நிபுணர் ஆலோசனைகளின் படி மேற்கொள்ளப்படுகின்ற, இந்த கூட்டு பேரழிவு நிவாரண நடவடிக்கை மூலம் கப்பலின் தீ பரவுவதை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளதுடன் இந்த கப்பலில் இருந்து கடலுக்கு எண்ணெய் கசிவு ஏற்படும் அபாயம் இல்லை.

MT NEW DIAMOND கப்பலின் இருப்பிட மாற்றத்தைக் காட்டும் கடல் வரைபடம்