செய்தி வெளியீடு


“பனமா கொடி கொண்ட New Diamond எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ” என்ற தலைப்பில் 2020 செப்டம்பர் 06 அன்று 0600 மணிக்கு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு தொடர்பானது.

இந்த கப்பல் நேற்று (2020 செப்டம்பர் 4,) 1800 மணிக்கு சுமார் 20 கடல் மைல் தூரத்தில் இருந்தாலும், இலங்கை கடற்படை மற்றும் பிற பங்குதாரர்களின் தொடர்ச்சியான முயற்சிகளால் கப்பலின் தீ கட்டுப்படுத்தப்பட்டதுடன் ALP Winger டக் படகு, பாதிக்கப்பட்ட கப்பலை 40 கடல் மைல் (சுமார் 74 கி.மீ) வரை ஆழ்கடலுக்கு கொண்டு சென்று நிறுத்தியது.

இருப்பிடத்தில் நாள் முழுவதும் (இன்று) தீயை அணைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆழ்கடல் காற்று காரணமாக அவ்வப்போது தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அவை டக் படகுகள் மற்றும் இந்திய கடலோர காவல்படை கப்பல்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்த செயல் பணிகளுக்காக ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்படுகின்றது.

அதன்படி, இலங்கை கடற்படைக்கு சொந்தமான மூன்று கப்பல்கள் (03) மற்றும் மூன்று துரித தாக்குதல் கப்பல்கள் (03), இலங்கை கடலோர காவல்படைக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் (02), இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான மூன்று கப்பல்கள் (03), இந்திய கடற்படைக்கு சொந்தமான ஒரு கப்பல், ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகக் குழுவின் இராவணா மற்றும் வசம்ப டக் படகுகள், பாதிக்கப்பட்டுள்ள கப்பலின் வெளிநாட்டு நிறுவனம் தயாரித்த ALP Winger டக் படகு, ஆழ்கடல் தீயணைப்பு வீரர்கள் கொண்ட டி.டி.டி 1 (TTT One) டக் படகு (01) இந்த தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், இலங்கை விமானப்படையின் எம்ஐ 17 ஹெலிகாப்டர் மற்றும் பீச் கிராஃப்ட் ஆகியவை இந்த நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவி வழங்குகிறது.

மேலும், இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான இரண்டு (02) டோர்னியர் விமானங்களும் அவசரகால பயன்பாட்டிற்காக மத்தல மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

பேரழிவு நிவாரணத்தில் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு வெளிநாட்டு தனியார் நிறுவனத்தை நியமிக்க கப்பலின் உரிமையாளர் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த நிறுவனம் இலங்கை மற்றும் இந்திய அதிகாரிகளுடன் ஒருங்கினைந்து செயல்பட்டு வருகிறது.