செய்தி வெளியீடு


2020 செப்டம்பர் 04 அன்று 1100 மணிக்கு “பனமா கொடி கொண்ட New Diamond எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ” தலைப்பின் கீழ் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு தொடர்பானது

இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, இலங்கை துறைமுக ஆணையம், இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை ஆகியவை இணைந்து எம்டி நியூ டயமண்ட் (MT New Diamond) என்ற எண்ணெய் கப்பலில் தீ பரவுவதைக் கட்டுப்படுத்த தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்திய கடலோர காவல்படையின் (ICGS Sarang) ஐ.சி.ஜி.எஸ் சாரங் கப்பல் பேரழிவு நிவாரண நடவடிக்கைக்கு உதவ சம்பவ இடத்திற்கு வந்துள்ளது. தீயணைப்பு உபகரணங்கள் மற்றும் தொழில்முறை தீயணைப்பு வீரர்கள் பொருத்தப்பட்ட டி.டி.டி 01 (TTT One) டக் படகொன்றும் மற்றொரு டக் படகொன்றும் இந்திய கடலோர காவல்படை கப்பலொன்றும் இன்று மாலை பேரழிவு நிவாரண நடவடிக்கைகளுக்காக சம்பவ இடத்தை அடைய திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிகழ்வை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அவசர விஷயமாகக் கருதி, இலங்கை துறைமுக ஆணையம், ஹம்பன்தோட்டை சர்வதேச துறைமுகக் குழு (HIPG), கொழும்பு கப்பல்துறை லிமிடெட் (CDL), இலங்கை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (CPC) மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) ஆகியவை வழங்கிய தீ அணைக்கும் இரசாயனங்களை கொண்டு இலங்கை கடற்படைக் கப்பல் 'சமுதுர' திருகோணமலை துறைமுகத்தில் இருந்தும் இலங்கை கடலோர காவல்படையின் 'சமுத்ரக்ஷா மற்றும் 'சமாரக்ஷா' ஆகிய கப்பல்கள் முறையே ஹம்பாந்தோட்டை மற்றும் கொழும்பு துறைமுகத்தில் இருந்தும் குறித்த நடவடிக்கைகளுக்காக புறப்பட்டு சென்றன.

தற்போது, மூன்று இலங்கை கடற்படைக் கப்பல்கள் (03) மற்றும் இரண்டு வேகத் தாக்குதல் படகுகள், இலங்கை விமானப்படையின் MI17 ஹெலிகாப்டர் மற்றும் ஒரு பீச் கிராஃப்ட் விமானம், ஹம்பான்தோட்டை சர்வதேச துறைமுக நிறுவனத்தின் (HIPG) ராவணா மற்றும் வசம்ப டக் படகுகளும் பாதிக்கப்பட்டுள்ள கப்பலின் வெளிநாட்டு நிறுவனம் தயாரித்த ALP Winger டக் படகு மற்றும் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான இரண்டு (02) கப்பல்களும், இந்திய கடற்படைக்கு சொந்தமான ஒரு போர்க்கப்பலும் இன்னமும் கப்பலில் தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

இந்தப் பின்னணியில்,. எம்டி நியூ டயமண்ட் (MT New Diamond) கப்பலில் தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் எந்த நேரத்திலும் ஆழ்கடலுக்கு இழுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட கப்பல் தற்போது கடற்கரையில் இருந்து 22 கடல் மைல் (35 கிலோமீட்டர்) தொலைவில் உள்ளது.