காலி, வக்வெல்ல மற்றும் தொடங்கொடை பாலங்களில் சிக்கி இருந்த கழிவுகளை அகற்ற கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
காலி, வக்வெல்ல மற்றும் தொடங்கொடை பாலங்களில் சிக்கிக்கிடந்த குப்பைகள் மற்றும் மரத்துண்டுகள் கட்ந்த தினங்களில் கடற்படையினரால் அகற்றப்பட்டன.
கின் ஆற்றின் குறுக்கே உள்ள வக்வெல்ல மற்றும் தொடங்கொடை பாலங்களில் சிக்கி இருந்த மூங்கில் புதர்கள், மரங்களின் கிளைகள் மற்றும் கழிவுகள் அகற்றும் பணிகள் தென் கடற்படை கட்டளையின் கடற்படைவீரர்களினால் மேற்கொள்ளப்பட்டது. மேலும் அங்கு நீர் சீராக ஓடுவதுக்காக மிகுந்த முயற்சியுடன் கழிவுகளை அகற்ற கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும், இதன் காரணமாக அப்பகுதியில் ஏற்படவுள்ள வெள்ள அபாயத்தை தடுக்க கடற்படை அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதுடன் ஏற்படக்கூடிய அபாயங்களிலிருந்து சமூகத்தைப் பாதுகாக்க கடற்படை விழிப்புடன் உள்ளது.