கடற்படையின் தொடர்ச்சியான நடவடிக்கைகளால் சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர்

நாட்டிலிருந்து போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்காக இலங்கை கடற்படை தேசிய பணிக்குழுவில் பங்களித்து தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி 2020 ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 3 வரை கடற்படை நடத்திய தேடுதல் நடவடிக்கைகளின் போது, இரண்டு சந்தேக நபர்கள் சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர்.

பேசாலை பகுதியில் பொலிஸ் சிறப்பு பணிக்குழுவுடன் இனைந்து வட மத்திய கடற்படை கட்டளை நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, 550 மில்லிகிராம் ஹெராயின் விற்க முயன்ற ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். மேலும் தலைமன்னார் பழைய இறங்குதுறை அருகில் கடற்கரையில் இருந்து சட்டவிரோதமாக நாட்டுக்குள் கடத்த முயன்ற 690 கிலோ கிராம் பீடி இலைகளையும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தனமல்வில பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவின் ஒருங்கிணைப்புடன் தெற்கு கடற்படை கட்டளை மேற்கொண்டுள்ள ஒரு நடவடிக்கையின் போது 900 கிராம் கஞ்சாவை வைத்திருந்த மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். இதற்கிடையில், மேற்கு கடற்படை கட்டளை பொலிஸ் சிறப்பு பணிக்குழுவுடன் இனைந்து அத்தனகலு ஓய பகுதியில் மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது 24 பீப்பாய்களில் வைக்கப்பட்டிருந்த 720 லிட்டர் கோடா கைது செய்யப்பட்டன.

இந்த நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களுடன், பேசாலை பொலிஸார், யாழ்ப்பாண சுங்க அலுவலகம், தனமால்வில பொலிஸார் மற்றும் கோனஹேன சிறப்பு பணிக்குழுவிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.