இலங்கை வரலாற்றில் முதல்முறையாக கடற்படை கடல்சார் கோட்பாடுகளின் குறியீட்டை வெளியிட்டுள்ளது
கடற்படையால் இலங்கை வரலாற்றில் முதல்முறையாக நிர்மானிக்கப்பட்ட இந்த கடல்சார் கோட்பாடுகளின் குறியீட்டு (Maritime Doctrine of Sri Lanka) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் தலைமையில் இன்று (2020 ஜூலை 9) கடற்படை தலைமையகத்தில் வெளியிடப்பட்டது.
இலங்கை வரலாற்றில் இது போன்ற ஒரு புத்தகம் வெளியிடப்படுவது இதுவே முதல் முறையாகும் நீண்டகால தேவையாக இருந்த இந்த கடல்சார் கோட்பாடுகளின் குறியீட்டு இலங்கை கடற்படையின் கடல் சக்தியின் தன்மை மற்றும் தேசிய தேவைகளைப் பூர்த்தி செய்ய எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதற்கான வழிகாட்டியாக பயன்படுத்தலாம்.
இந்த வழிகாட்டியின் அறிமுகத்தில் பேசிய கடற்படைத் தளபதி, ஒரு நாட்டின் கடல் சக்தியின் பரந்த அளவைக் கண்டறிவதற்கும், கடல் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் கடல்சார் கொள்கைகள் நீண்ட தூரம் செல்லும் என்று கூறினார். அதேசமயம், கடற்படை நடத்தை விதிமுறை இன்று முதல் கடற்படை வலைத்தளமான www.navy.lk/doctrine.html இல் தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்வுக்காக துனை கடற்படைத் தளபதி, பணிப்பாளர் நாயகங்கள் உட்பட கடற்படை தலைமையகத்தின் பல மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும், இந்த கடல்சார் கோட்பாடுகளின் குறியீட்டு இன்று (2020 ஜூலை 09) கடற்படைத் தளபதி பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவுக்கு அதிகாரப்பூர்வமாக வழங்கினார்.