‘சத் சித் சத் கம் பியச’ புதிய வார்டு வளாகம் கடற்படைத் தளபதியால் திறந்து வைக்கப்பட்டது

கடற்படையின் ஆதரவின் கீழ் கராப்பிட்டி வைத்தியசாலையில் புதிதாக கட்டப்பட்ட ‘சத் சித் சத் கம் பியச’ புதிய வார்டு வளாகம் இன்று (2020 ஜூன் 13) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவினால் திறந்து வைக்கப்பட்டன.

கராப்பிட்டி புற்றுநோய் வைத்தியசாலையில் சிறப்பு மருத்துவர் கிருஷாந்த பெரேராவின் கருத்துப்படி கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் நிவாரணக் குழு, காலி இலங்கை புற்றுநோய் சங்கம் மற்றும் பலரின் நிதி உதவியுடன் ரூ .70 மில்லியன் செலவில் இந்த புதிய வார்டு வளாகம் கடற்படையினரால் கட்டப்பட்டது.

இனிமையான சூழலில் அமைந்துள்ள இந்த புதிய வார்டு வளாகத்தில் அழகிய நீர் குளமொன்று மற்றும் புத்தர் சிலையொன்று நிருவப்பட்டது. கராபிட்டி மருத்துவமனையில் குடியிருப்பு சிகிச்சைக்காக வரும் சுமார் 30 நோயாளிகளுக்கு புதிய வார்டு வளாகத்தில் தங்கும் வசதி வழங்கப்படும். இந்நிகழ்வில் தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி, ரியர் அட்மிரல் கஸ்ஸப போல் உட்பட பல கடற்படை அதிகாரிகள் மற்றும் கராபிட்டி போதனா மருத்துவமனையின் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும், கட்டுமானத்தைத் தொடங்குவதற்கு முன்பு கைவிடப்பட்ட இந்த பூமியில் இதுபோன்ற அழகான வார்டு வளாகத்தை கட்டியமைத்த கடற்படைக்கு நன்றி தெரிவித்தனர்.