கடற்படை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களுக்கு அருகிலுள்ள அரசு வைத்தியசாலைகளிலிருந்து மாதாந்திர மருந்துகளைப் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
covid 19 தொற்றுநோய் காரணத்தினால், covid 19 வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான சிகிச்சை மையமாக கொழும்பு கடற்படை பொது வைத்தியசாலை மாற்றப்பட்டுள்ளது. இந்த பின்னணியில், ஓய்வு பெற்ற கடற்படை வீரர்கள், கடற்படை பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் மாதாந்திர மருந்துகளை பெறுவதுக்காக எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு மாதாந்திர மருந்துகளைப் அருகிலுள்ள அரசு வைத்தியசாலைகளிலிருந்து பெற கடற்படை ஒரு புதிய திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது,
எனவே, கடற்படை பொது வைத்தியசாலையின் மாதாந்திர சிகிச்சை பெற்றவர்கள் இப்போது தங்கள் குடும்ப சிகிச்சை புத்தகம், மருந்துவ ஆலோசகர்களால் கடைசியாக நியமிக்கப்பட்ட மருந்து பத்திரிக்கை அல்லது கடைசியாக கிடைக்கப்பட்ட மருந்துகள் அரசாங்க வைத்தியசாலையின் வெளி நோயாளி பிரிவிடம் சமர்ப்பிப்பதன் மூலம் தங்களுடைய மருந்துகளைப் பெறலாம்.
பரிந்துரைக்கப்பட்ட மாதாந்திர மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் உள்ள களஞ்சியச் சாலையில் இருந்து மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.