நோய்வாய்ப்பட்ட மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி

பேருவல மீன்வள துறைமுகத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக புறப்பட்ட மீன்பிடிப் படகில் இருந்த சுக்கையீனமுற்ற ஒரு மீவைரை கடற்படையினரினால் சிகிச்சைக்காக 2020 மே 04 ஆம் திகதி கரைக்கு கொண்டுவரப்பட்டன.

இலங்கையைச் சுற்றியுள்ள கடல் மண்டலத்தைப் பயன்படுத்தும் மீனவர்கள் மற்றும் கடல் சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தொடர்ந்து செயல்பட்டு வரும் இலங்கை கடற்படை, இன்று பேருவல மீன்வள துறைமுகத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக புறப்பட்ட ‘பிரசாதி 04' என்ற பல நாள் மீன்பிடிக் படகில் ஒரு மீனவருக்கு ஏற்பட்டுள்ள பக்கவாதம் நோய் காரனத்தினால் அவரை கரைக்கு கொண்டு வர உதவி வழங்கியது. மேற்படி மீனவர் தொடர்பாக மீன்பிடி மற்றும் நீர்வள திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு விரைந்த இலங்கை கடற்படையின் தென் பிராந்திய கட்டளையகத்தின் அதிவேக தாக்குதல் படகின் மூலம் குறித்த மீனவர் பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வரப்பட்டன.

அதன்படி, காலி கடல் பகுதியில் இருந்து சுமார் 32 மைல் (60 கி.மீ) தொலைவில் தற்போதய தொற்றுநோய் நிலைமையைக் கருத்தில் கொண்டு, நோய்வாய்ப்பட்ட நபரை மீன்பிடிப் படகில் இருந்து மீட்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. நோயாளியை படகில் இருந்து டிட்ட பின் கடற்படை மருத்துவ குழுவினரால் நோயாளிக்கு முதலுதவிகள் அளிக்கப்பட்டு, கடற்படை படகின் மூலம் காலி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன் அவர் மேலதிக சிகிச்சைக்காக உடனடியாக ‘சுவசரிய’ ஆம்புலன்ஸ் மூலம் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

மேலும், சர்வதேச மரபுகளுக்கு ஏற்ப கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பை இலங்கை கடற்படை புரிந்துகொண்டுள்ளதோடு இலங்கையர்களுக்கு கடலில் ஏற்படும் விபத்துகளை தடுப்பதுக்கு தொடர்ந்து பதிலளித்து வருகின்றது.