கடற்படையினரால் ஆழ்கடலில் கைப்பற்றப்பட்ட ஏராளமான போதைப்பொருள் மற்றும் மீன்பிடி படகு திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது
இலங்கை கடற்படையின் ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பலான இலங்கை கடற்படை கப்பல் சமுதுர இலங்கையில் இருந்து சுமார் 548 கடல் மைல் (சுமார் 985 கி.மீ) தொலைவில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட நடவடிக்கையின் பின்னர் கைப்பற்றிய சட்டவிரோத போதைப்பொருள், சந்தேக நபர்கள் மற்றும் படகு இன்று (2020 ஏப்ரல் 15) திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி கடற்படையால் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கப்பலில் இருந்த நபர்களை விசாரிப்பதன் மூலம் பெறப்பட்ட தகவல்களின் மற்றும் சர்வதேச தகவல் பரிமாற்றம், செயற்கைக்கோள் தொலைபேசி தரவு பகுப்பாய்வுகள் மூலம் பெறப்பட்ட தகவல்களின் படி போதைப்பொருள் கொண்ட மேலும் ஒரு கப்பல் இலங்கையை நோக்கிச் வருதாகவும், அதில் சில போதைப்பொருள் இலங்கைக்கு வரவிருப்பதாகவும் தெரியவந்தது. இந்த பகுப்பாய்வுகளின் அடிப்படையில், மார்ச் 30 அன்று, இலங்கை கடற்படையின் ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பலான இலங்கை கடற்படை கப்பல் சமுதுர 14 நாள் கடல் ஆய்வு பயணத்திற்காக குறித்த கடல் பகுதிக்கு அனுப்பப்பட்டது.
அதன்படி, இலங்கை கடற்படை கப்பல் சமுதுர குறித்த கடல் பகுதியை ஆய்வு செய்யும் போது ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் நிறுவனம் (UNODC) இலங்கை கடற்படைக்கு வழங்கிய சில செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்தது. அதன் பின் கப்பல் பூமத்திய ரேகை நோக்கி பயணித்துள்ளதுடன் ஏப்ரல் 10 ஆம் திகதி ஒரு மாநிலக் கொடி (Flag Stateless) இல்லாத வெளிநாட்டு கப்பலொன்று கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த கப்பலை சோதனையின் போது, ரூ. 327 கோடி மதிப்புள்ள 281 கிலோகிராம் ஹெராயின் மற்றும் 48 கிலோகிராம் ஐஸ் (Crystal Methamphetamine) ஆகியவற்றைக் கண்டுபிடிக்கப்பட்டது.
சந்தேகநபர்கள் மற்றும் கப்பல் இன்று (ஏப்ரல் 15, 2020) திக்கோவிட்ட மீன்பிடி துறைமுக வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டன. இந் நிகழ்வுக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா உட்பட பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் மற்றும் கடற்படையின் பல மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். கைது செய்யப்பட்ட கப்பல், போதைப்பொருள் மற்றும் சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் மற்றும் மேலதிக சட்ட நடவடிக்கைகள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தால் மேற்கொள்ளப்படும்.
அதன்படி, இந்த ஆண்டில் இதுவரை வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான போதைப்பொருள் சோதனைகளை கடற்படை நடத்தியுள்ளது. 2020 யில் கடந்த மூன்று மாதம் 10 நாட்களில் 718 கிலோகிராம் ஹெராயின், 797 கிலோகிராம் ஐஸ், 581 கிலோகிராம் கெட்டமைன் மற்றும் 2475 கிலோகிராம் கஞ்சா கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாரு கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 21 பில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படை செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இவ்வாரு தொடர்ந்து சர்வதேச கடலில் போதைப்பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் பற்றி தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்கிறது. மேலும், போதைப்பொருள் விநியோகச் சங்கிலியில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பங்காளர்களைப் பின்தொடர்வதற்காக இலங்கை கடற்படை பொலிஸ் போதைப்பொருள் பணியகத்துடன் இணைந்து பணியாற்ற நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் உரையாற்றிய கடற்படைத் தளபதி, மீன்வள சமூகம் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு இரையாகாமல், தங்கள் வாழ்க்கையைத் தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
|