இலங்கை கடற்படைக் கப்பல் "புவனெக" கடற்படை தளத்தில் மற்றும் ஒலுவில் துறைமுக வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் நிறுவப்பட்டுள்ளன
புதிய கெரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் தேசிய திட்டத்திக்கு ஆதரவாக, இலங்கை கடற்படை 2020 மார்ச் 28 ஆம் திகதி மன்னார் முலன்காவில் பகுதியில் உள்ள இலங்கை கடற்படைக் கப்பல் புவனெக கடற்படைத் தளத்தில் மற்றும் ஒலுவில் துறைமுக வளாகத்தில் இரண்டு (02) தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை நிறுவியது.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் கூட்டு பொறிமுறையை வலுப்படுத்த, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில் இலங்கை கடற்படைக் கப்பல் "புவனெக" கடற்படை தளத்தில் நான்கு (04) கட்டிடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டன. தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் 64 பேருக்கு தேவையான வசதிகள் உள்ளன. மேலும், 80 நபர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளை வழங்குவதற்காக ஒலுவில் துறைமுக வளாகத்தில் துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான இரண்டு (02) கட்டிடங்களை புதுப்பிக்கவும் கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு வருபவர்களுக்கு, கடற்படை மூலம் சுகாதாரம், இணையம், தொலைக்காட்சி மற்றும் பிற தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடற்படை பொது சுகாதார ஆய்வாளர்களின் மேற்பார்வையின் கீழ், இந்த தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு வருபவர்களுக்கு சத்தான உணவை வழங்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
|