கடற்படை தலைமன்னாருக்கு வடக்கு கடலிருந்து கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றியது.

இலங்கை கடற்படை இன்று (2020 மார்ச் 21) தலைமன்னார் கலங்கரை விளக்கத்திக்கு வடக்கு கடல் பகுதியில் நடத்திய சிறப்பு ரோந்துப் பணியின் போது 147 கிலோகிராம் ஈரமான கேரள கஞ்சாவை கைப்பற்றியது.

இலங்கைக்கு கடல் வழியாக கொண்டு வரப்படும் போதைப்பொருள் கடத்தல் முயற்சிகளைத் தடுக்க இலங்கை கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன்படி, தலைமன்னார் கலங்கரை விளக்கத்தின் வடக்கு கடல் பகுதியில் சிறப்பு ரோந்துப் பணியின் போது சந்தேகத்திற்கிடமான இரண்டு பைகள் கடலில் மிதப்பதை வட மத்திய கடற்படை கட்டளை மாலுமிகள் குழு கவனித்தது. அதன்படி, சந்தேகத்திற்கிடமான பைகளை முழுமையாக சோதனை செய்த பின்னர், அவற்றில் ஒரு பெரிய அளவிலான கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த கேரள கஞ்சா 147 கிலோ, ஈரமான எடை மற்றும் 120 கிலோ உலர் எடை கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளதுடன் கேரள கஞ்சாவின் தெரு மதிப்பு சுமார் ரூ 240 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. தீவைச் சுற்றியுள்ள கடலில் கடற்படை நடத்திய தேடல் நடவடிக்கைகளின் விளைவாக கடத்தல்காரர்கள் கஞ்சாவை கைவிட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மேலதிக விசாரணைகளுக்காக முலங்காவில் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதுடன் இந்த ஆண்டுக்குள் இதுவரை கடற்படை மேற்கொண்ட நடவடிக்கைகளில் இரண்டு (02) டன்னுக்கு அதிகமான கேரள கஞ்சா கைப்பற்றியது.