இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் கடற்படை தலைமையகத்திற்கு வருகை
நான்கு நாள் இலங்கைக்கு நல்லெண்ண விஜயத்தினை மேற்கொண்ட இந்திய கடற்படை தளபதி அத்மிரல் கரம்பீர் சிங் இன்று 2019 டிசம்பர் 19 இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வாவை சந்தித்தார்.
விஜயத்தினை மேற்கொண்ட இந்திய கடற்படை தளபதியவர்களை கடற்படை தலைமையகத்தின் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா வரவேற்றதனைத்தொடர்ந்து கடற்படை சம்பிரதாய முறைப்படி அவருக்கு மரியாதை வழங்கப்பட்டது. அதன் பின் கடற்படைத் தளபதியவர்கள் கடற்படை தலைமை பணியாளர் உட்பட கடற்படை பணிப்பாளர் நாயகங்களை அறிமுகம் செய்து வைத்தார்
இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் மற்றும் இலங்கை கடற்படையின் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவு பரிசு பரிமாற்றமும் நடைபெற்றது.
நல்லுறவு கலந்துரையாடலுக்குப் பின்னர், இந்திய கடற்படைத் தளபதிக்காக இலங்கை கடற்படையின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து ஒரு விளக்கத்தை கடற்படை தலைமையக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றதுடன் இக் கலந்துரையாடலில் இலங்கை கடற்படையின் தளபதி, கடற்படைத் கடற்படை தலைமை பணியாளர் மற்றும் பணிப்பாளர் நாயகங்கள் கலந்து கொண்டனர்.
மேலும், இலங்கை கடற்படைத் தளபதி மற்றும் பணிப்பாளர் நாயகங்களுடன் ஒரு குழு புகைப்படத்திக்கும் கழந்துகொண்ட இந்திய கடற்படைத் தளபதி அதைத் தொடர்ந்து, இலங்கை கடற்படை தளபதி அலுவலகத்தில் சிறப்பு விருந்தினருக்கான நினைவு புத்தகத்தில் ஒரு நினைவு குறிப்பும் வைத்தார். .
இந்திய கடற்படை தளபதி அத்மிரல் கரம்பீர் சிங் அவர்கள் இலங்கையில் தங்கியிருந்தபோது, அவர் ஜனாதிபதி கௌரவ பிரதமர், பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு பதவி நிலை பிரதானி, விமானப்படைத் தளபதி ஆகியோரைச் சந்தித்ததுடன் திருகோணமலையில் உள்ள கடல்சார் அகாடமியின் கடற்படையினரின் பயிற்சியின் பின்னர் வெளியேறும் நிகழ்வில் பிரதம அதிதியாக பங்கேற்கவுள்ளார் என்பது குறிப்பிடதக்க விடயமாகும். மேலும் அவர் டிசம்பர் 22 ம் திகதி இந்தியா நோக்கி புறப்பட உள்ளார்.
|