இலங்கை கடற்படை 69வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது

இலங்கை கடற்படை தனது 69வது ஆண்டு நிறைவை இன்று (டிசம்பர். 09) கொண்டாடுகிறது. இதனையொட்டி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதல்களுடன் கடற்படையினரால் சர்வ மத வழிபாட்டு நிகழ்வுகள், சமூக நலன்புரி செயற்பாடுகள், கடற்படை நிகழ்வுகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டன.

அதன்படி, நவம்பர் மாதம் 27 மற்றும் 28 திகதிகளில் அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதி அருகில் கொடி ஆசிர்வாதிக்கும் பூஜை மற்றும் கப்றுக பூஜையின் தொடந்த மத திட்டங்கள் தொடரின் கிரிஸ்துவர் வழிப்பாட்டு கொழும்பு புநித லூசியா ஆலயத்திலும், முஸ்லீம் மத சார்பு சத்தாம் தெரு ஜும்மா மசூதிலும், இந்து மத திருவிழா கொட்டாஞ்சேனை, ஸ்ரீ பொன்னம்பலராமேஷ்வரம் ஆலயத்திலும் இடம்பெற்றது.

அதனோடு இனைந்து நவம்பர் மாதம் 29 ஆம் திகதி வெலிசரை கடற்படை வளாகத்தில் இரவு முழுவதும் தர்ம வளிபாடுகள் நடைபெற்றது. அதன் பின் நவம்பர் 30 ஆம் திகதி தானம் மற்றும் பிரிகர பூஜை நடைபெற்றது அங்கு சங்கதேர்ர்கள் மூலம் தாய்நாடுக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த கடற்படையினர், ஊனமுற்ற கடற்படையினர் மற்றும் தற்போதைய கடற்படைத் தளபதி உட்பட கடற்படை உருபினர்களுக்கு ஆசீர்வதிக்க பட்டன.

மேலும், 2019 டிசம்பர் 08 மற்றும் இன்று (டிசம்பர் 9) ஆம் திகதிகளில் வரலாற்று ரீதியான தலதா மாலிகை அருகே கிலன்பச வுடன் புத்த பூஜை நடைபெற்றது. இதன் பின்னர் கடற்படை தளபதி அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடாதிபதிகளை சந்தித்தார். இதன் பிரகு தலதா மாலிகை அருகே ஸ்ரீ உத்தம தந்த தாதுன் வஹன்சேவுக்கு விசித்திரமான முன் பிரசாதம் நடைபெற்றன. இப் புந்யதானம் முடிவின் பிறகு வணக்கத்துக்கூரிய சங்கத்தினருக்கு பிரசாதம் வழங்கபட்டன. இந் நிகழ்வுகலுக்காக கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி, திருமதி அருந்ததி உதிதமாலா ஜயநெத்தி, கடற்படை பணியாளர்களின் தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, கடற்படை கட்டளைகளின் தளபதிகள், பணிப்பாளர் நாயகங்கள், சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் வீர்ர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

மேலும், 69 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று (டிநம்பர் 09) இலங்கை கடற்படை கப்பல் நிருவனத்தில் கட்டளை அதிகாரி கேப்டன் மஹேஷ் த சில்வா கடற்படை மரபுகளுக்கு ஏற்ப பிரிவுகளை ஆய்வு செய்து குழுவினரை உரையாற்றினார். அதன் பின் கடற்படை நடவடிக்கைகளின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் நன்தன ஜயரத்ன தலைமையில் அதிகாரிகள் மற்றும் கடற்படை வீரர்களின் பங்களிப்புடன், ‘பரகனா’ நிகழ்ச்சியில் வழக்கமான உணவு பங்கேற்புடன் ஆண்டு விழாக்கள் நிறைவடைந்தன.

இதற்க்கு இனையாக அனைத்து கடற்படை கட்டளை களிலும் சர்வ மத வழிபாட்டு நிகழ்வுகள், சமூக நலன்புரி செயற்பாடுகள், கடற்படை நிகழ்வுகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டன.


வடக்கு கடற்படை கட்டளை


கிழக்கு கடற்படை கட்டளை


மேற்கு கடற்படை கட்டளை


வடமேற்கு கடற்படை கட்டளை


தென் கடற்படை கட்டளை


தென் கிழக்கு கடற்படை கட்டளை


வட மத்திய கடற்படை கட்டளை