வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்கு கடற்படையின் தொடர்ச்சியான ஆதரவு

சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் மருத்துவ சேவைகள், உலர் உணவு, குடிநீர் வழங்குதல் மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்த நீர் விநியோக சேவைகளை மீட்டெடுப்பது உள்ளிட்ட மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்கு கடற்படை நேற்று (2025 டிசம்பர் 01,) உதவி வழங்கியது.

அதன்படி, அவிசாவளையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய மருத்துவ சேவைகளை வழங்குதல், சிலாவத்துறையில் இருந்து ஒரு தீவிர நோயாளியை கடல் வழியாக சிகிச்சைக்காக மன்னாருக்கு கொண்டு செல்லுதல், பியகம, சிலாபம் மற்றும் கம்பளை மக்களுக்கு உலர் உணவு மற்றும் குடிநீரை வழங்குதல் ஆகியவற்றில் கடற்படையின் பங்களிப்பு செய்யப்பட்டது.

இதேபோல், திஸ்ஸமஹாராம பிரதேச செயலகப் பிரிவின் கங்கை சிறிபுர பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது இடங்கள் மற்றும் வீடுகளை சுத்தம் செய்தல், சிலாவத்துறை மாவட்ட பொது மருத்துவமனைக்கு குடிநீர் வழங்குதல், திவுலபிட்டிய வலையமைப்பு விநியோக வாரியத்தின் நீர் பம்பை மீட்டமைத்தல் மற்றும் கண்டியில் உள்ள கோஹாகொட நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சிக்கியுள்ள சேற்றை அகற்றுதல் போன்ற பணிகளில் கடற்படையின் பங்களிப்பு வழங்கப்பட்டது.

மேலும், கடற்படை அனர்த்த நிவாரணக் குழுக்கள் முழு தீவையும் உள்ளடக்கிய மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து பங்களிக்கின்றன.