வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அவிசாவளை பிரதேச மக்களுக்கு மனிதாபிமான நிவாரணங்களை வழங்க கடற்படை உதவியது
சீரற்ற காலநிலை நிலவியதால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அவிசாவளை பிரதேச மக்களுக்காக, அமிதிரிகலை சுகாதார மருத்துவ அலுவலகம் மூலம் ஒரு மருத்துவ சிகிச்சையானது, அவிசாவளை குருகல்ல கனிஷ்ட வித்தியாலயத்தில் 2025 நவம்பர் 30 ஆம் திகதி நடைபெற்றதுடன், இந்த மருத்துவ சிகிச்சைக்காகவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அந்த பகுதி மக்களுக்கு மனிதாபிமான நிவாரணம் வழங்குவதற்காகவும் கடற்படை உதவி வழங்கியது















