திருகோணமலையில் மாவில் ஆறு குளக்கரை இடிந்து விழுந்ததில் சிக்கித் தவித்த 309 பேரை கடற்படை மீட்டது

திருகோணமலையில் உள்ள மாவில் ஆறு குளத்தின் ஒரு பகுதி நேற்று (2025 நவம்பர் 30,) பெய்த கனமழை காரணமாக நிரம்பி வழியும் நிலையை எட்டியதால் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக கடற்படை நவம்பர் 30 ஆம் திகதி முழுவதும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் தொடர்ந்து வருகின்றது.

அதன்படி, இன்று காலை (2025 டிசம்பர் 01,) நிலவரப்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 309 பேர் மூதூர் பகுதியிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு மூதூர் கல்கந்த விஹாரஸ்தான வளாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், மூதூர் பகுதிக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்காக கடற்படை தரையிறங்கும் கப்பல் மற்றும் தரையிறங்கும் படகு, அத்துடன் ஒரு கடலோர ரோந்து கப்பல் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், கடற்படை இந்த மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கையைத் தொடர்கிறது.