IUU Fishing-ta
கிளிநொச்சி, இரணைதீவுக்கு வடக்கு கடற்பரப்பில் இரவு நேரத்தில் சுழியோடி கடல் அட்டைகளை சட்டவிரோதமாக மீன்பிடித்த 07 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்
இலங்கை கடற்படையினர், கிளிநொச்சியின் இரணைதீவின் வடக்கு கடல் பகுதியில் 2026 பிப்ரவரி 05 ஆம் திகதி இரவு நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இரவு நேர சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஏழு (07) நபர்களையும், முன்னூற்று முப்பத்தைந்து (335) கடல் அட்டைகளுடன், இரண்டு (02) டிங்கி படகுகள் மற்றும் சுழியோடி உபகரணங்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
07 Feb 2026
மன்னார், நச்சிக்குடா கடற்கரைப் பகுதியில் கடற்படையினரால் ஆமை இறைச்சி மற்றும் முட்டைகளுடன் 03 சந்தேக நபர்கள் கைது
மன்னார் நச்சிக்குடா கடற்கரைப் பகுதியில் 2026 ஜனவரி 31 ஆம் திகதி இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் பதினேழு (17) கிலோகிராம் ஆமை இறைச்சி, முப்பத்தொன்பது (39) ஆமை முட்டைகள் மற்றும் ஒரு (01) டிங்கி படகுடன் மூன்று (03) சந்தேக நபர்களைக் கடற்படையினர் கைப்பற்றினர்.
02 Feb 2026
திருகோணமலை கல்லடிச்சேனை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாக ஆமை முட்டைகளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை கடற்படையினர் கைப்பற்றினர்
திருகோணமலை கல்லடிச்சேனை கடற்கரைப் பகுதியில் 2026 ஜனவரி 28 ஆம் திகதி இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நூற்று பதினேழு (117) ஆமை முட்டைகளை சட்டவிரோதமாக வைத்திருந்த ஒரு (01) நபரை கைப்பற்றினர்.
31 Jan 2026
உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகள் வடகடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
இலங்கை கடற்படையினர், யாழ்ப்பாணம் கோவிலன் பகுதிக்கு அப்பால் இலங்கை கடல் பகுதியில் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 2026 ஜனவரி 20 அன்று இரவு, உள்ளூர் கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இரண்டு (02) இந்திய மீன்பிடி படகுகளையும் ஏழு (07) இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்தனர்.
21 Jan 2026
சட்டவிரோத மீன்பிடியை தடுப்பதற்காக கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 23 நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்
இலங்கை கடற்படையினர் மற்றும் கடலோர காவல்படையினர் 2026 ஜனவரி 14 முதல் 19 வரை உள்ளூர் கடல் பகுதியை உள்ளடக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள் மற்றும் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இருபத்தி மூன்று (23) நபர்கள், ஐந்து (05) டிங்கி படகுகள் மற்றும் ஒரு (01) இழுவைப் படகு ஆகியவற்றைக் கைப்பற்றினர்.
21 Jan 2026
கிளிநொச்சி வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத இரவு நேர சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் கடல் அட்டைகளுடன் 13 சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்
இலங்கை கடற்படையினர் 2026 ஜனவரி 19 அதிகாலை கிளிநொச்சி வடக்கு, வலைப்பாடு கடற்பரப்பில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இரவு நேரத்தில் சட்டவிரோதமாக சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பதின்மூன்று (13) நபர்களையும், ஆயிரத்து நூற்று எட்டு (1108) கடல் அட்டைகளுடன், நான்கு (04) டிங்கி படகுகள் மற்றும் சுழியோடி உபகரணங்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
20 Jan 2026
உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 01 இந்திய மீன்பிடி படகு வடகடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
இலங்கை கடற்படை, கடலோர காவல்படையுடன் இணைந்து, யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அருகில் உள்ள இலங்கை கடற்பரப்பில் 2026 ஜனவரி 12 ஆம் திகதி இரவு ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதுடன், இதன் போது, உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பத்து (10) இந்திய மீனவர்களையும், ஒரு (01) இந்திய மீன்பிடிக் படகையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
13 Jan 2026
சட்டவிரோத மீன்பிடியை தடுப்பதற்காக கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 13 நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்
இலங்கை கடற்படை 2026 ஜனவரி 06 முதல் 11 வரை உள்ளூர் கடல் பகுதியை உள்ளடக்கிய நடவடிக்கைகளின் மூலம், தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள், உரிமங்கள் இல்லாமல் சுழியோடுதல் மற்றும் சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நான்கு (04) டிங்கி படகுகளுடன் பதின்மூன்று (13) நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
13 Jan 2026
உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட (02) இந்திய மீன்பிடி படகுகள் வடகடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
இலங்கை கடற்படை, 2025 ஜனவரி 02 அன்று இரவு யாழ்ப்பாணம் காரைநகர் கோவிலான் பகுதிக்கு அருகில் உள்ள இலங்கை கடற்பரப்பில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இரண்டு (02) இந்திய மீன்பிடி படகுகளுடன் ஒன்பது (09) இந்திய மீனவர்களை கடற்படையினர் கைப்பற்றினர்.
05 Jan 2026
உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகொன்று வடகடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
இலங்கை கடற்படை, 2025 ஜனவரி 01 அன்று இரவு யாழ்ப்பாணம் காரைநகர் கோவிலான் பகுதிக்கு அருகில் உள்ள இலங்கை கடற்பரப்பில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஒரு (01) இந்திய மீன்பிடி படகுடன் பதினொரு (11) இந்திய மீனவர்களை கடற்படையினர் கைப்பற்றினர்.
02 Jan 2026


