தாய்வான் திறந்த தடகள போட்டித்தொடரில் பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை கடற்படை வீராங்கனை கயந்திகா அபேரத்ன வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்

தாய்வானின், தாய்பேயில் நடைபெறுகின்ற தாய்வான் திறந்த தடகளப் போட்டித்தொடரில் 2024 ஜூன் மாதம் 01 ஆம் திகதி நடைபெற்ற 1500 மீற்றர் பெண்கள் ஓட்டப் போட்டியில் இலங்கைப் பிரதிநிதியாக கலந்து கொண்ட இலங்கை கடற்படை வீராங்கனை கயந்திகா அபேரத்ன வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

இதன்படி, கடற்படை வீராங்கனை கயந்திகா அபேரத்ன, 4 நிமிடம் 24.66 வினாடிகளில் 1500 மீற்றர் பெண்களுக்கான ஓட்டப் போட்டியை முடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இவர் இலங்கை கடற்படைக்கு பெருமை சேர்த்ததோடு, இலங்கையின் பெருமையை சர்வதேசத்தின் முன் உயர்த்தினார்.

மேலும் கடற்படை விளையாட்டு வாரியத்தின் தலைவரான கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், கடற்படை விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி வாய்ப்புகளுக்கான வசதிகளை வழங்குவதன் மூலமும் அவர்களின் நலன்புரி வசதிகளை விரிவுபடுத்துவதன் மூலமும் சர்வதேச வெற்றிகளைப் பெற முடிகிறது.