இலங்கை நாக் அவுட் பேஸ்பால் போட்டித்தொடரில் கடற்படை ஆண்கள் பேஸ்பால் அணி இரண்டாம் இடத்தை வென்றது
இலங்கை நாக் அவுட் பேஸ்பால் போட்டித்தொடர் 2024 ஜனவரி 06 முதல் 21 ஆம் திகதி வரை தியகம இலங்கை ஜப்பான் நட்புறவு பேஸ்பால் விளையாட்டரங்கில் நடைபெற்றதுடன் அங்கு இறுதிப் போட்டியில் கடற்படை ஆண்கள் பேஸ்பால் அணி இரண்டாம் இடத்தைப் பெற்றது.
இதன்படி, கடற்படை பேஸ்பால் அணி உட்பட தீவின் பிரபல பேஸ்பால் கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல வீரர்கள் இச்சுற்றுப்போட்டியில் கலந்து கொண்டதுடன், பத்தொன்பது (19) பேஸ்பால் அணிகளில் கடற்படை ஆண்கள் பேஸ்பால் அணியும் இராணுவ அணியும் இறுதிப் போட்டிக்கு தெரிவானது. அங்கு நடைபெற்ற இறுதிப் போட்டியில் 09-04 என்ற புள்ளிக்கணக்கில் இராணுவ அணி வெற்றிபெற்றதுடன், கடற்படை அணி போட்டித் தொடரின் இரண்டாம் இடத்தை கைப்பற்றியது.
மேலும், இலங்கை பேஸ்பால் சம்மேளனத்தின் தலைவர் திரு.அசங்க செனவிரத்ன, கடற்படை பேஸ்பால் அணியின் தலைவர் கேப்டன் உபுல் சமரகோன் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பேஸ்பால் வீரர்கள் இறுதிப் போட்டி நிகழ்வில் கலந்துகொண்டனர்.