'தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - 2023'ல் பல வெற்றிகளை கடற்படை விளையாட்டு வீரர்கள் பெற்றனர்
96வது 'தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - 2023' (96th BASL Men & Women National Boxing Championship 2023) 2024 ஜனவரி 17 ஆம் திகதி கொழும்பு ராயல் கல்லூரியின் ராயல் மாஸ் அரினா குத்துச்சண்டை வளையத்தில் நடைபெற்றது. இதில் கடற்படை ஆண்கள் மற்றும் பெண்கள் குத்துச்சண்டை அணிகள் பல வெற்றிகளைப் பெற்றனர்.
இந்த சம்பியன்ஷிப் போட்டித்தொடரில் தீவின் பிரபல குத்துச்சண்டை விளையாட்டு கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர், மேலும் முப்பத்தாறு (36) விளையாட்டு வீரர்கள்/வீராங்கனைகள் இலங்கை கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டனர்.
இதன்படி, கடற்படை ஆண் குத்துச்சண்டை வீரர்களில் 92 கிலோவுக்கு கீழ் எடைப் பிரிவை பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை வீரர் கேஎம்சிகே கருணாநாயக்க தங்கப் பதக்கத்தையும், 75 கிலோவுக்கு கீழ் எடைப் பிரிவை பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை வீரர் டபிள்யூ.எம்.ஜி.கே.ஜி.ஐ. ஆரியரத்ன வெள்ளிப் பதக்கத்தையும், கடற்படை வீரர் ஆர்.ஜி.யூ.எஸ் ரூபஸ்ஸர அதே எடையில் இரண்டு வெண்கலப் பதக்கங்களும் (02), 63.5 கிலோவுக்கு கீழ் எடைப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை வீரர் என்.எச்.திலகரத்ன வெள்ளிப் பதக்கத்தையும், 67 கிலோவுக்குட்பட்ட எடைப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை வீரர் ஏ.எம்.டி.எஸ்.அதிகாரி வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர். மேலும், 54 கிலோ எடைப்பிரிவின் கீழ் கடற்படை வீரர் ஏ.எஸ்.பிரியங்கர வெண்கலப் பதக்கத்தையும், 51 கிலோ கிராமுக்கு கீழ் எடைப்பிரிவின் கடற்படை வீரர் எஸ்.ஐ. ரன்மல் மற்றும் ஏ.எம்.ஜி.ஐ. பண்டார வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.48 கிலோவுக்கு குறைவான எடைப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை வீரர் ஜீ.கே.ஜீ.டப்.யூ குமார வெண்கலப் பதக்கத்தையும், 92 கிராமுக்கு மேல் எடைப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை வீர்ர் ஈ.எச்.டி.சி டி சில்வா வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
மேலும், கடற்படை மகளிர் குத்துச்சண்டை வீரர்களில், 48 கிலோவுக்கு கீழ் எடைப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை வீராங்கனை கே.எம்.எம்.ஜே.கோனார வெண்கலப் பதக்கத்தையும், 54 கிலோவுக்குட்பட்ட எடைப்பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை வீராங்கனை ஆர்.எம்.ஒய்.டி.பி.மெனிகே வெண்கலப் பதக்கத்தையும், 52 கிலோ கிராமுக்கு கீழான எடைப்பிரிவை பிரதிநிதித்துவப்படுத்திய வீராங்கனை ஆர்.எம்.எஸ்.எஸ்.ரத்தாயக்க வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
மேலும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன (ஓய்வு பெற்றவர்), இலங்கை குத்துச்சண்டை சங்கத்தின் தலைவர் திரு.டயன் கோம்ஸ் மற்றும் குத்துச்சண்டை கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் விளையாட்டு வீரர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.