சர்வதேச அளவில் பதக்கங்கள் வென்ற கடற்படை விளையாட்டு வீரர்களுக்கு கடற்படை தளபதியின் பாராட்டு
தாய்நாட்டிற்காக சர்வதேச விளையாட்டு சாதனைகளை படைத்த கடற்படை வீர வீராங்கனைகள் 2024 ஜனவரி 16 ஆம் திகதி கடற்படை விளையாட்டு வாரியத்தின் தலைவரான கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தனர். அங்கு அவர்களின் விளையாட்டு சாதனைகளை பாராட்டி கடற்படை தளபதியினால் அவர்களுக்கு பெறுமதியான பணப்பரிசுகள் வழங்கப்பட்டன.
அதன்படி, 2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பளுதூக்கலில் வெள்ளிப் பதக்கம் வென்ற கடற்படை வீரர் ஈ.ஏ.டி.கே.டி. எகொடவத்த மற்றும் கடற்படை விராங்கனை பி.சி.பிரியந்தி, அதே போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்ற டி.எம்.ஐ.சி. திசாநாயக்கவும் 2023 ஆம் ஆண்டில் சீனாவில் நடைபெற்ற 19 ஆவது ஆசிய கிரிக்கெட் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்ற கடற்படை விராங்கனை ஐ ரணவீர, கடற்படை விராங்கனை கே.டி.யு பிரபோதனி, கடற்படை விராங்கனை ஜி.ஏ.டபிள்யூ.எச்.எம். பெரேரா மற்றும் கடற்படை விராங்கனை எச்.எம்.டி.சமரவிக்ரம ஆகியோருக்கும் கடற்படைத் தளபதி பெறுமதியான பணப் பரிசுகளை வழங்கினார்.
மேலும், 2023 ஆம் ஆண்டில் தாய்லாந்தில் நடைபெற்ற 25 ஆவது ஆசிய தடகளப் போட்டிகளில், 800 மீற்றர் மற்றும் 1500 மீற்றர் தொலைதூரப் பந்தயங்களில் வெண்கலப் பதக்கங்களை வென்ற கடற்படை விராங்கனை ஜி.டி.ஏ அபேரத்ன மற்றும் அதே போட்டியிலும் சீனாவில் நடைபெற்ற 19 ஆவது ஆசிய தடகளப் போட்டியிலும் 4x400 மீற்றர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்ற கடற்படை விராங்கனை பீ.எஸ்.எல் மெண்டிஸுக்கு கடற்படைத் தளபதியினால் பெறுமதியான பணப்பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன.
தாய்நாட்டிற்கு சர்வதேச விளையாட்டு வெற்றிகளை பெற்றுக் கொடுப்பதற்கு அவர்களின் தனித்துவமான பங்களிப்புக்காக கடற்படை தளபதி அவர்களை வாழ்த்தினார், கடற்படையின் நற்பெயரை உயர்த்துவதற்கும் தாய்நாட்டிற்கு பெரும் பெருமை சேர்ப்பதிலும் அவர்கள் ஆற்றிய தனித்துவமான பங்களிப்பை அங்கீகரித்து, அவர்களை மேலும் ஊக்குவிக்க இவ்வாரு பெறுமதிமிக்க பணப்பரிசுகள் வழங்கப்பட்டன.