2023 தேசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டித்தொடரில் கடற்படையிலிருந்து மூன்று புதிய தேசிய சாதனைகள்
2023 டிசம்பர் 27 முதல் 30 வரை பொலன்னறுவ தேசிய விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற தேசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 87 கிலோகிராம் மூத்த பெண்கள் பளுதூக்குதல் நிகழ்வில் பங்கேற்ற கடற்படை வீராங்கனை பி.சி.பிரியந்திவினால் 2023 டிசம்பர் 28 ஆம் திகதி மூன்று புதிய தேசிய சாதனைகள் நிறுவப்பட்டது.
விளையாட்டு அமைச்சின் முன்முயற்சியின் கீழ் இலங்கை பளுதூக்குதல் சங்கம் ஏற்பாடு செய்த 2023 தேசிய பளுதூக்கும் போட்டித்தொடரில் 14 கடற்படை வீரர்கள் பங்கேற்றினர். மேலும், தீவு முழுவதிலும் உள்ள முக்கிய பளு தூக்கும் விளையாட்டுக் கழகங்களின் வீர வீராங்கணிகளும் இப் போட்டியில் பங்கேற்கின்றனர்.
அதன்படி, இந்த போட்டியில் 87 கிலோ கிராம் மூத்த பெண்களுக்கான பளுதூக்கும் போட்டியில் கலந்து கொண்ட கடற்படை வீராங்கனை பி.சி.பிரியந்தி, ஸ்னாட்ச் முறையில் 90 கிலோவும், கிளீன் அன்ட் ஜெர்க் முறையில் 113 கிலோவும், மொத்தம் 203 எடையும் தூக்கி, மூன்று புதிய போட்டி சாதனைகளை படைத்தார். இதேவேளை, இலங்கையின் பளுதூக்குதல் வரலாற்றில் பெண் வீராங்கனையொருவர் தூக்கிய அதிகூடிய எடைப் பளுவாகவும் இது பதிவாகியுள்ளது.