அமைப்புகளுக்கிடையேயான இளைய எல்லே போட்டித்தொடரில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை கடற்படை வென்றது

இலங்கை எல்லே சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அமைப்புகளுக்கிடையேயான இளைய ஆண்கள் எல்லே போட்டித்தொடர் 2023 நவம்பர் 21 முதல் 24 வரை வெலிசர நவலோக விளையாட்டு மைதானத்தில் மற்றும் களனி பொல்ஹேன சீவலி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றதுடன், அங்கு ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை கடற்படை வென்றது.

வத்தளை பிரதேச சபை அணி, களனி பிரதேச சபை அணி, கட்டான பிரதேச சபை அணி, சிவில் விமான சேவைகள் நிறுவன அணி, இலங்கை கடற்படை அணி மற்றும் இலங்கை விமானப்படை அணி என 06 அணிகள் இந்த அமைப்புகளுக்கிடையேயான இளைய எல்லே போட்டித்தொடரில் போட்டியிட்டன. இதன் இறுதிப் போட்டிக்காக இலங்கை கடற்படை அணி மற்றும் இலங்கை விமானப்படை அணி தெரிவு செய்யப்பட்டது.

அதன்படி, 30 பந்துகள் கொண்ட இருதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய விமானப்படை அணி 05 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கடற்படை அணி 24 பந்துகளில் 08 விக்கெட்டுகளை இழந்து 06 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.