12வது பாதுகாப்பு சேவைகள் துப்பாக்கி சுடுதல் போட்டித்தொடரில் கடற்படை பல வெற்றிகளைப் பெற்றுள்ளது

2023 செப்டெம்பர் 17 முதல் 24 வரை வெலிசர கடற்படை துப்பாக்கி சுடும் வளாகத்தில் நடைபெற்ற 12வது பாதுகாப்பு சேவைகள் துப்பாக்கி சுடுதல் போட்டித்தொடரில், கடற்படை துப்பாக்கி சுடும் அணி பல வெற்றிகளைப் பெற்றுள்ளது.

முப்படை வீரர்களின் அதிக எண்ணிக்கையிலான விளையாட்டு வீரர்கள் இப் போட்டியில் கலந்து கொண்டதுடன் கடற்படை ஆண்கள் மற்றும் பெண்கள் துப்பாக்கி சுடும் அணிகள் பயிற்சி துப்பாக்கி சுடுதல் மற்றும் சிறிய துளை சுடுதல் நிகழ்வுகளில் வெற்றி பெற்றனர்.

அதன்படி, நடைமுறை கைத்துப்பாக்கி சுடுதல் நிகழ்வின் கீழ் இடம்பெற்ற நிலையான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கடற்படை ஆண்கள் மற்றும் பெண்கள் துப்பாக்கி சுடுதல் அணிகள் வெற்றி பெற்றதுடன் சிறிய துளை ஆயுதங்கள் துப்பாக்கி சுடும் நிகழ்வின் கீழ் 10 மீ ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் அணி சாம்பியன்ஷிப்பை வென்றது. 50 மீ 3X20 துப்பாக்கி சுடுதல் ஆன்கள் போட்டியில் கடற்படை ஆண்கள் துப்பாக்கி சுடும் அணி சாம்பியன்ஷிப்பை வென்றது மற்றும் 50 மீ 3X20 ரைபிள் மகளிர் சாம்பியன்ஷிப்பை கடற்படை பெண்கள் துப்பாக்கி சுடும் அணி வென்றது.

மேலும், இந்தப் போட்டித்தொடரில் ஒட்டுமொத்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் சிறந்த விழையாட்டு வீரராக கடற்படை வீரர் எச்டிபி குமாரும் நிலையான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் சிறந்த விழையாட்டு வீரராக கேப்டன் பீஎம்பீஎல் தயானந்தவும் பதக்கங்களை வென்றனர்.

மேலும், இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கடற்படையின் பிரதிப் பிரதானி மற்றும் பணிப்பாளர் நாயகம் செயற்பாடுகள் ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க, கடற்படையின் விளையாட்டுப் பணிப்பாளர் கொமடோர் ரொஷான் அத்துகோரல, கடற்படை துப்பாக்கிச் சூட்டுப் பிரிவின் தலைவர் கொமடோர் மஞ்சுல திஸாநாயக்க, முப்படை அதிகாரிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.