கட்டளைகளுக்கிடையேயான சைக்கிள் ஓட்டுதல் போட்டி - 2023 இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிருவனத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது
இலங்கை கடற்படைக் கப்பல் தம்பபன்னி நிருவனத்தில் 2023 ஆகஸ்ட் 30 ஆம் திகதி இடம்பெற்ற 2023 கட்டளைகளுக்கு இடையேயான சைக்கிள் ஓட்டுதல் போட்டித்தொடரில் ஆண்கள் சாம்பியன்ஷிப்பை கிழக்கு கடற்படைக் கட்டளை வென்றதுடன் பெண்கள் சாம்பியன்ஷிப்பை பயிற்சி கட்டளை வென்றது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வடமேற்கு கடற்படை கட்டளையின் துணைத் தளபதி கொமடோர் துஷார உடுகம கலந்துகொண்டார்.
அதன்படி, இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிறுவனத்தில் இருந்து ஆரம்பித்து குருநாகல் நோக்கி 40 கிலோமீற்றர் சென்று ஆரம்ப இடத்தில் முடிவடைந்த இப்போட்டியில் ஐம்பத்தொரு (51) விளையாட்டு வீரர்கள் மற்றும் பதின்மூன்று (13) விளையாட்டு வீராங்கனைகள் கலந்து கொண்டனர். கட்டளைகளுக்கிடையேயான சைக்கிள் ஓட்டுதல் போட்டியில், கிழக்கு கடற்படை கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை வீரர் பி.எல்.எஸ்.டி.குமார முதலாம் இடத்தையும், கிழக்கு கடற்படை கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை வீரர் (சுழியோடி) ஜே.டி.பி.பி ஜயசிங்க இரண்டாம் இடத்தையும், கிழக்கு கடற்படை கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை வீரர் டபிள்யூ.டி.எம். குமார மூன்றாம் இடத்தையும் வென்றனர். அதன் படி கிழக்கு கடற்படை கட்டளை இந்த ஆண்டு கட்டளைகளுக்கு இடையேயான சைக்கிள் ஓட்டுதல் ஆண்கள் சாம்பியன்ஷிப்பை வென்றது.
மேலும், கட்டளைகளுக்கிடையேயான பெண்கள் சைக்கிள் ஓட்டுதல் போட்டியில், கிழக்கு கடற்படை கட்டளைப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை பெண் மாலுமி ஜி.டி.டி. சகுந்தலா முதலாம் இடத்தையும், தென் கடற்படைக் கட்டளைப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை பெண் மாலுமி ஈ.எம்.ஏ.ஜி.எல்.பி எதிரிசிங்க இரண்டாம் இடத்தையும் பயிற்சிக் கட்டளைப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை பெண் அதிகாரி லெப்டினன்ட் ஏ.எஸ்.எஸ். விஜேசிறி மூன்றாம் இடத்தையும் வென்றனர். அதன் படி கட்டளைகளுக்கிடையேயான மகளிர் சைக்கிள் ஓட்டுதல் சாம்பியன்ஷிப்பைப் பயிற்சிக் கட்டளை வென்றது.
மேலும், கடற்படை சைக்கிள் ஓட்டுதல் குழுவின் தலைவர் கொமடோர் அனுருத்த கருணாதிலக உட்பட கடற்படை சைக்கிள் ஓட்டுதல் அணி மற்றும் கடற்படை கட்டளைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.