12வது பாதுகாப்பு சேவைகள் பேஸ்பால் போட்டியில் ஆண்கள் சாம்பியன்ஷிப்பை கடற்படை வென்றது

2023 ஜூலை 25 முதல் 28 ஆம் திகதி வரை தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்ற 12வது பாதுகாப்பு சேவைகள் பேஸ்பால் போட்டியில் கடற்படை பேஸ்பால் அணி ஆண்கள் சாம்பியன்ஷிப்பை வென்றது.

அதன்படி, இலங்கை இராணுவ அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் திறமையாக விளையாடிய கடற்படை அணி 12/5 புள்ளிகள் பெற்று சம்பியன் பட்டத்தை வென்றதுடன், இறுதிப் போட்டியில் கடற்படை வீர்ர் வை.டி.புஸ்பகுமார 2 புள்ளிகளையும், பி.எச்.புஷ்பசிறி 03 புள்ளிகளையும், ஐ.எச்.டி.லால் 03 புள்ளிகளையும், எச்.ஏ.ஏ.சாந்த 01 புள்ளியும், ஐ.பி.டி.எம் விக்ரமசிங்க 02 புள்ளிகளையும், எம்.எம்.விமலரத்ன 01 புள்ளியும் பெற்று கடற்படை அணியின் வெற்றிக்கு பங்களித்தனர்.

மேலும், சிறந்த துடுப்பாட்ட வீரரானக ஐபீடீஎம் விக்ரமசிங்கவும், சிறந்த பந்து வீச்சாளராக ஆர்எம்எம்பீ ரணதுங்க மற்றும் பெறுமதிமிக்க வீரராக அணித்தலைவர் வை.டி.புஸ்பகுமார ஆகியோர் விருதுகளை வென்றனர். இந்நிகழ்வில் முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவிகளை கொண்ட குழுவினர் கலந்துகொண்டனர்.