2023 கட்டளைகளுக்கு இடையேயான ஆறுபேர் கொண்ட மகளிர் மென்பந்து கிரிக்கெட் போட்டித்தொடரில் சாம்பியன்ஷிப்பை மேற்கு கடற்படை கட்டளை வென்றது

2023 கட்டளைகளுக்கு இடையேயான ஆறுபேர் கொண்ட மகளிர் மென்பந்து கிரிக்கெட் போட்டித்தொடர் 2023 ஜூன் மாதம் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் வெலிசர கடற்படை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றதுடன் இறுதிப் போட்டியில் பிரதம அதிதியாக கடற்படை கிரிக்கெட் குழுவின் தலைவர் ரியர் அட்மிரல் ஜலாஜ் பொன்னம்பெரும கலந்து கொண்டார்.

இதன்படி, 2023 கட்டளைகளுக்கு இடையேயான ஆறுபேர் கொண்ட மகளிர் மென்பந்து கிரிக்கெட் போட்டித்தொடரின் இறுதிப் போட்டி வட மத்திய கடற்படை கட்டளை மற்றும் மேற்கு கடற்படை கட்டளைக்கு இடையில் நடைபெற்றது. அங்கு நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கு கடற்படை கட்டளை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தெரிவு செய்து 05 ஓவர்களில் 69 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வடமத்திய கடற்படை கட்டளை 03 ஓவர்களில் 19 ஓட்டங்களை மாத்திரமே பெற்று சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

போட்டியின் சிறந்த துடுப்பாடராக கடற்படை வீராங்கனை டப்.டீ.ஐ.எஸ் டயஸ் தெரிவு செய்யப்பட்டார். போட்டியின் சிறந்த பந்துவீச்சாளராக தென் கடற்படை கட்டளையின் கடற்படை வீராங்கனை எல்.எச்.எம்.ஓ.எல் குமாரி தெரிவு செய்யப்பட்டார், போட்டியின் சிறந்த பந்து காப்பாளராக வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீராங்கனை ஜீ.வீ.எஸ்.எஸ் கமகே வென்றார். மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீராங்கனை கே.பி.எம் பெரேராவினால் 'இறுதி ஆட்டத்தின் நாயகன்' கிண்ணம் பெறப்பட்ட்டைன் தென் கடற்படைக் கட்டளையின் கடற்படை வீராங்கனை எல்.எச்.எம்.ஓ.எல். குமாரி, 'போட்டித்தொடரின் நாயகன்' என்ற கோப்பையை வென்றார்.

மேலும், இந்த நிகழ்வில் கடற்படை விளையாட்டுப் பணிப்பாளர் கொமடோர் ரொஷான் அத்துகோரல, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஒவ்வொரு கடற்படை கட்டளைகளின் அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் குழுவும் கலந்துகொண்டனர்.