கட்டளைகளுக்கு இடையேயான மேசைப்பந்து போட்டித்தொடரில் சாம்பியன்ஷிப்பை மேற்கு கடற்படை கட்டளை வென்றது

கட்டளைகளுக்கு இடையேயான மேசைப்பந்து போட்டித்தொடர் 2023 ஜூன் மாதம் 20 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிருவனத்தில் உள்ள கொமாண்டர் பராக்கிரம சமரவீர நினைவு உள்ளக அரங்கில் நடைபெற்றது. இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை மேற்கு கடற்படை கட்டளை வென்றதுடன் வடக்கு கடற்படை கட்டளை இரண்டாம் இடத்தை வென்றது.

அனைத்து கடற்படை கட்டளைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இச்சுற்றுப்போட்டியில் 09 ஆண்கள் அணிகளும், 06 பெண்கள் அணிகளும் பங்குபற்றியதுடன், இறுதிநாள் பிரதம அதிதியாக மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வா கலந்து கொண்டார். போட்டியின் திறந்த ஒற்றையர் பிரிவு மகளிர் சாம்பியன்ஷிப்பை பெண் கடற்படை வீராங்கனை எச்.பி.எம்.ஹபுகஸ்பிட்டியவும், திறந்த ஒற்றையர் ஆண் சாம்பியன்ஷிப்பை கடற்படை வீரர் எல்.ஜி.எஸ்.எம்.பெரேராவும். வெற்றி பெற்றனர். இந்த ஆண்டின் வளர்ந்து வரும் வீரருக்கான விருதை கடற்படை வீர்ர் எஸ்.ஜி.விஜேசூரிய (ஆண்கள்) மற்றும் பெண் கடற்படை வீராங்கனை ஏ.எம்.எஸ்.டி. அத்தபத்து (பெண்கள்) ஆகியோர் வென்றனர்.

மேலும், கடற்படைப் பணிப்பாளர் விளையாட்டு கொமடோர் ரொஷான் அத்துகோரல உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் குழுவும், கடற்படைக் கட்டளைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் குழுவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.