தாய்நாட்டிற்காக தங்கப் பதக்கங்களை வென்ற கடற்படை விளையாட்டு வீர வீராங்கணைகளுக்கு பணப் பரிசுகள் வழங்கப்பட்டன

ஜப்பான் மற்றும் டுபாயில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்ற கடற்படை வீராங்கணை கயந்திகா அபேரத்ன மற்றும் கடற்படை பரா தடகள வீர்ர் எஸ்.எம்.ஏ.எஸ்.எம்.சுபசிங்க ஆகியோர் தங்களின் பதக்கங்கள் மற்றும் விருதுகளுடன், இன்று (2023 ஜூன் 20) இலங்கை கடற்படை விளையாட்டு சபையின் தலைவரான கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தனர். தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்த இவர்களது செயற்பாடுகளை பாராட்டிய வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, இரு விளையாட்டு வீரர்களுக்கும் பணப்பரிசுகளை வழங்கி அவர்களின் விளையாட்டு வாழ்க்கையை தொடர ஊக்குவித்தார்.

இதற்கிடையில், 2023 மே மாதம் 03 முதல் 21 ஆம் திகதி வரை ஜப்பானில் இடம்பெற்ற ஷிசோகா மற்றும் 10 வது கினாமி மசிதகா நினைவு தடகளப் போட்டியில் (39th Shizuoka Meet & 10th Kinami Machitaka Memorial Athletics Meet – 2023) 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தை கடற்படை வீராங்கணை கயந்திகா அபேரத்ன வென்றதுடன் 2023 பிப்ரவரி 26 முதல் 2023 மார்ச் 01 வரை டுபாயில் நடைபெற்ற ‘Dubai Grand Prix 2023 - 14th Fazza’ சர்வதேச பாரா தடகளப் போட்டியில் A 47 பிரிவின் கீழ், ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்ற கடற்படை பரா தடகள வீர்ர் எஸ்.எம்.ஏ.எஸ்.எம். சுபசிங்க அதன் தங்கப் பதக்கத்தை வென்றார்.

இதன்படி, சர்வதேசப் போட்டிகளில் தாய்நாட்டிற்காக தங்கப் பதக்கங்களை வெல்வதற்கு அவர்களின் சிறப்பான பங்களிப்பிற்காக, கடற்படைத் தளபதி அவர்களை வாழ்த்தியதுடன், கடற்படையின் நற்பெயரையும், உயர்த்தி தாய்நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் ஆற்றிய சிறப்பான பங்களிப்பைப் பாராட்டினார். அவர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் பணப் பரிசுகளும் வழங்கப்பட்டன.