'கடற்படைத் தளபதி கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடர் - 2023' தெற்கு மண்டலம் வென்றது

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் 2023 ஜூன் மாதம் 09 ஆம் திகதி வெலிசர கடற்படை வளாக கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 'கடற்படைத் தளபதி கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடர் - 2023' (Commander of the Navy’s Cup) மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட் சுற்றுப்போட்டியாக நடைபெற்றதுடன் அதன் வெற்றி கிண்ணம் தெற்கு மண்டலம் வென்றதுடன் இரண்டாம் இடம் வடக்கு மண்டலம் பெற்றுள்ளது.

இதன்படி, வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய நான்கு (04) வலயங்களின் கீழ் நடைபெற்ற இக் கிரிக்கட் சுற்றுப்போட்டியில் கப்டன் பி.எஸ்.பரணவிதான தலைமையில் தெற்கு மண்டல அணியும் லெப்டினன்ட் கமாண்டர் ஏ.டி விரசூரிய தலைமையில் வடக்கு மன்டல அணியும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன.

முதலில் துடுப்பெடுத்தாடிய தெற்கு மண்டல அணி 22 ஓவர்களில் சகல வீரர்களையும் இழந்து 89 ஓட்டங்களைப் பெற்றது. பின்னர், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வட மண்டல கிரிக்கெட் அணி, சகல வீரர்களையும் இழந்து 34.2 ஓவர்களில் 74 ஓட்டங்கள் மட்டுமே பெற்றது. அதன்படி, ‘Commander of the Navy’s Cup’ கிரிக்கெட் போட்டித்தொடரின் வெற்றி கின்னம் தெற்கு மண்டலம் வென்றது.

இப் போட்டித்தொடரின் சிறந்த பந்து காப்பாளராக கிழக்கு வலய அணியின் கடற்படை வீரர் கே.பி.எல்.ஏ.ஆர்.பெரேராவும், போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீரராக மேற்கு வலய அணியின் கடற்படை வீரர் ஐ.என்.டப் குணவர்தனவும், சிறந்த பந்து வீச்சாளராக வடக்கு வலய அணியின் எச்.பி.டி.ஆர். விஜேசிங்கவும் பெற்றுள்ளனர். இதேவேளை, இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக தெற்கு வலயத்தின் கடற்படை வீர்ர் என்.ஏ.எச் டி சில்வா தெரிவுசெய்யப்பட்டதுடன், போட்டித்தொடரின் சிறந்த வீரருக்கான விருதை எச்.பி.டி.ஆர். விஜேசிங்க வென்றார்.

மேலும், இந்நிகழ்வில் கடற்படை தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன, பணிப்பாளர் நாயகம் கடற்படை காலாட்படை ரியர் அட்மிரல் ஜலாஜ் பொன்னம்பெரும, கடற்படை விளையாட்டுப் பணிப்பாளர் கொமடோர் ரொஷான் அத்துகோரல உள்ளிட்ட சிரேஷ்ட மற்றும் இளநிலை அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் கலந்துகொண்டனர். assets/images/news/sport_news/front_img/202306101645.jpg