12வது பாதுகாப்பு சேவைகள் நீச்சல் மற்றும் வாட்டர் போலோ போட்டித்தொடரில் முதலாம் இடம் மற்றும் இரண்டாம் இடம் கடற்படை நீச்சல் அணிகள் வென்றன.

2023 ஜூன் மாதம் 05 ஆம் திகதி முதல் 09 ஆம் திகதி வரை இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிருவனத்தின் நீச்சல் தடாகத்தில் நடைபெற்ற 12 ஆவது பாதுகாப்பு சேவைகள் நீச்சல் மற்றும் வாட்டர் போலோ போட்டித்தொடரில், கடற்படை மகளிர் நீச்சல் குழு நீச்சல் சம்பியன்ஷிப்பை வென்றதுடன், கடற்படையின் ஆண்கள் நீச்சல் குழு இரண்டாம் இடத்தை வென்றது.

அதன்படி 800 மீ., பிரீஸ்டைல் போட்டியில் வெள்ளிப் பதக்கம், 100 மீ., பிரஸ்ட் ஸ்ட்ரோக் போட்டியில் தங்கப் பதக்கம், 200 மீ., தனிநபர் மெட்லே பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம், 400 மீ., பிரீஸ்டைல் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம், 50 மீ. போட்டியில் தங்கப் பதக்கம், கடற்படை வீராங்கணி எல்.சி.என். பெர்னாண்டோ வென்றார். 50 மீ. பேக் ஸ்ட்ரோக்கில் தங்கப் பதக்கம், 100 மீ. பேக்ஸ்ட்ரோக்கில் வெள்ளிப் பதக்கம், 50 மீ. ஃப்ரீஸ்டைலில் வெள்ளிப் பதக்கம், 200 மீ. ஃப்ரீஸ்டைலில் வெள்ளிப் பதக்கம் மற்றும் 100 மீ. ஃப்ரீஸ்டைலில் வெள்ளிப் பதக்கம் கடற்படை வீராங்கணி வி.என். களுஆராச்சி வென்றார். மேலும், 50 மீ. போட்டி மற்றும் 100 மீ. பட்டர்பிளை போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை கடற்படை வீராங்கணி டி.என் ஹெட்டிகே வென்றார்.

மேலும், இந் நிகழ்வுக்காக கடற்படையின் பணிப்பாளர் நாயகம் மின் மற்றும் இலத்திரனியல் பொறியியலாளர் ரியர் அட்மிரல் விராஜ் லீலாரத்ன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன் கடற்படையின் விளையாட்டுப் பணிப்பாளர் கொமடோர் ரொஷான் அத்துகோரள, கடற்படை நீச்சல் மற்றும் வாட்டர் போலோ அணியின் தலைவர் மற்றும் முப்படைகளின் சிரெஷ்ட மற்றும் இளநிலை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.