நிகழ்வு-செய்தி
பூஸ்ஸ மற்றும் கற்பிட்டி கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விட்டு மேலும் 42 நபர்கள் வெளியேறினர்
பூஸ்ஸ கடற்படை முகாமில் மற்றும் கற்பிட்டி பகுதியில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 42 நபர்கள் 2020 ஜூலை 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் குறித்த மையங்களை விட்டு வெளியேறினர்.
27 Jul 2020
சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகளை மற்றும் கடற்கரை பகுதிகளை பாதுகாக்க கடற்படையின் பங்களிப்பு
இலங்கை கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு சதுப்புநில நடவு மற்றும் கரையோர தூய்மைப்படுத்தும் திட்டமொன்று 2020 ஜூலை 25 மற்றும் 26 ஆகிய திகதிகளில் வடக்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளைகளை மையமாகக் கொண்டு இடம்பெற்றன.
27 Jul 2020
இலங்கை கடற்படை கப்பல் ஜகதாவின் புதிய கட்டளை அதிகாரியாக லெப்டினன்ட் கமாண்டர் கிரிஷாந்த ரணசிங்க பொறுப்பேற்றார்
இலங்கை கடற்படையின் விரைவான தாக்குதல் ரோந்து கப்பலான இலங்கை கடற்படை கப்பல் ஜகதாவின் புதிய கட்டளை அதிகாரியாக லெப்டினன்ட் கமாண்டர் கிரிஷாந்த ரணசிங்க 2020 ஜூலை 25 ஆம் திகதி பொறுப்பேற்றார்.
27 Jul 2020
கடற்படையின் புதிய தளபதி மிரிசாவெடியவுக்கு மரியாதை செலுத்தி எதிர்காலத்திற்கான ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன 2020 ஜூலை 25 அன்று அனுராதபுரத்தில் உள்ள மிரிசாவெட்டிய விகாரைக்குச் சென்று ஆசீர்வாதங்களைப் பெற்றார். இந்த நிகழ்வில் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவர் திருமதி சந்திமா உலுகேதென்ன, கடற்படை தளபதியின் அன்பு மனைவி மற்றும் கடற்படையின் பல மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
25 Jul 2020
கடற்படையி தளபதி ருவன்வெலி ஸ்தூபத்திற்கு மரியாதை செலுத்தி ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்.
24 ஆவது கடற்படையின் தளபதியாக பொறுப்பேற்ற பின்னர், வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன 2020 ஜூலை 25 அன்று அனுராதபுரத்தில் உள்ள ருவன்வெலி ஸ்தூபத்திற்கு மரியாதை செலுத்தினார்.
25 Jul 2020
கடற்படைத் தளபதி ஜெய ஸ்ரீ மகா போதி வழிபட்டு ஆசீர்வாதங்களைப் பெற்றார்
கடற்படையின் 24 வது தளபதியாக கடமைகளை ஏற்றுக்கொண்ட வைஸ் வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, ஜூலை 25, 2020 அன்று அனுராதபுரத்தில் உள்ள ஜெய ஸ்ரீ மகா போதிக்கு மரியாதை செலுத்தி ஆசீர்வாதங்களைப் பெற்றார். இந்நிகழ்ச்சியில் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவர் திருமதி சந்திமா உலுகேதென்னா, கடற்படை தளபதியின் அன்பு மனைவி மற்றும் கடற்படையின் பல மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
25 Jul 2020
இந்திய கடற்படைத் தளபதி கடற்படைத் தளபதி நிஷாந்த உலுக்கேதென்னவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்
இன்று (ஜூலை 24, 2020) ஒரு தொலைபேசி உரையாடலின் போது இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங், இலங்கை கடற்படையின் 24 வது தளபதியாக நியமிக்கப்பட்டதற்காக வைஸ் அட்மிரல் நிஷாந்தா உலுக்கேதென்னவை வாழ்த்தியுள்ளார்.
24 Jul 2020
இராணுவ மருத்துவத்தில் முதுகலை பட்டப்படிப்பு துவக்க விழாவில் கடற்படைத் தளபதி கலந்து கொண்டார்
இராணுவ மருத்துவத்தில் முதுகலை பட்டப்படிப்பின் ஆரம்ப வெளியீட்டு நிகழ்வு இன்று (2020 ஜூலை 23) ஆம் திகதி கொழும்பு இராணுவ மருத்துவமனையில் உள்ள கேட்போர் கூடத்தில்இடம்பெற்றன. இந் நிகழ்வுக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கலந்து கொண்டார்.
23 Jul 2020
கேரள கஞ்சா கொண்ட சந்தேக நபரை கைது செய்ய கடற்படை உதவி
இலங்கை கடற்படை மற்றும் சிறப்பு பணிக்குழு ஒருங்கிணைந்து 2020 ஜூலை 22 அன்று குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்தில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கேரள கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
23 Jul 2020
சந்தேகத்திற்கிடமான படகொன்றுடன் இரண்டு (02) நபர்கள் கடற்படையால் கைது
2020 ஜூலை 22 ஆம் திகதி இரவு நகர்கோயில் கடலில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, இலங்கை கடற்படை சந்தேகத்திற்கிடமான படகொன்றுடன் இரண்டு (02) நபர்கள் (02) கைது செய்தது.
23 Jul 2020