நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படையின் அபீத II, ரணவிக்கிரம மற்றும் ரணவிஜய கப்பல்களுக்கான புதிய கட்டளை அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

கொமாண்டர் சமில ராஜபக்ஷ, கொமாண்டர் சாந்த அம்பன்வல மற்றும் லெப்டினன்ட் கொமாண்டர் இந்துவர தர்மரத்ன ஆகியோர் முறையே இலங்கை கடற்படை கப்பல் அபீத II, ரணவிக்ரம மற்றும் ரணவிஜய ஆகிய கப்பல்களின் கட்டளை அதிகாரிகளாக 2020 ஆகஸ்ட் 04 அன்று நியமிக்கப்பட்டனர்.

05 Aug 2020

கடற்படையின் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விட்டு மேலும் 09 நபர்கள் வெளியேறினர்

பூஸ்ஸ கடற்படை முகாமில் மற்றும் கற்பிட்டி பகுதியில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 09 நபர்கள் 2020 ஆகஸ்ட் 02,03 மற்றும் 04 ஆம் திகதிகளில் மையங்களை விட்டு வெளியேறினர்.

04 Aug 2020

ரியர் அட்மிரல் கஸ்ஸப போல் கடற்படை சேவையிலிருந்து விடைபெற்றார்

ரியர் அட்மிரல் கஸ்ஸப போல் 2020 ஆகஸ்ட் 03 ஆம் திகதி 34 ஆண்டுகளுக்கும் மேலாக தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

04 Aug 2020

கொமடோர் பிரியந்த பெரேரா தெற்கு கடற்படை கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ளார்

கமடோர் பிரியந்த பெரேரா தெற்கு கடற்படை கட்டளைத் தளபதியாக 2020 ஜூலை 31 அன்று தெற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

02 Aug 2020

கொமாண்டர் அசங்க மனுரத்ன இலங்கை கடற்படைக் கப்பல் ரத்னதீபவின் கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார்

இலங்கை கடற்படையின் கடலோர ரோந்து கப்பலான இலங்கை கடற்படை கப்பல் இரத்னதீபவின் புதிய கட்டளை அதிகாரியாக 2020 ஜூலை 31 அன்று கொமாண்டர் அசங்க மனுரத்ன கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

02 Aug 2020

இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் புதிய கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் டேவிட் ஹோலி அவர்கள் 2020 ஜூலை 31 வெள்ளிக்கிழமை கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தார்.

01 Aug 2020

வெலிசர கடற்படையினர் நினைவுச்சின்னத்திற்கு புதிய கடற்படை தளபதி மலர் அஞ்சலி செலுத்தினார்

இலங்கை கடற்படையின் 24 வது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்கள் கடற்படை தளபதியாக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக இன்று (2020 ஜூலை 31) வெலிசரவுள்ள கடற்படையினர் நினைவுச்சின்னம் அருகில் பயங்கரவாதத்தை நீக்கும் நடவடிக்கைகளின் போது தாய் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த மற்றும் காணாமல் போன கடற்படையினர் நினைவு கூறி மலர் அஞ்சலி செலுத்தினார்.

31 Jul 2020

இலங்கையில் ஜப்பான் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையில் உள்ள ஜப்பான் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் ககு புக்கோரா, (Gaku Fukaura) கடற்படை தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுக்கேதென்னவை 2020 ஜூலை 30 அன்று சந்தித்தார்.

31 Jul 2020

கடற்படையின் பூஸ்ஸ மற்றும் கற்பிட்டி தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விட்டு மேலும் 21 நபர்கள் வெளியேறினர்

பூஸ்ஸ கடற்படை முகாமில் மற்றும் கற்பிட்டி பகுதியில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 21 நபர்கள் 2020 ஜூலை 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் மையங்களை விட்டு வெளியேறினர்.

30 Jul 2020

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் புதிய கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன். விகாஸ் சூட் (Captain Vikas Sood) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை இன்று ( 2020 ஜுலை 28 )சந்தித்தார்.

29 Jul 2020