நிகழ்வு-செய்தி
கடற்படையின் பூஸ்ஸ தனிமைப்படுத்தப்பட்ட மையத்தை விட்டு மேலும் 27 நபர்கள் வெளியேறினர்
பூஸ்ஸ கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 27 நபர்கள் கடந்த தினங்களில் மையத்தை விட்டு வெளியேறினர்.
10 Aug 2020
வடக்கு மற்றும் தெற்கு கடற்கரைகள் கடற்படையின் பங்களிப்பால் சுத்தம் செய்யப்பட்டன
தீவைச் சுற்றியுள்ள கரையோரப் பகுதியை மாசு இல்லாத மண்டலமாக பராமரிக்க கடற்படை பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் படி வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் கடற்கரைகளை கடந்த வாரம் கடற்படையினரால் சுத்தம் செய்யப்பட்டன.
10 Aug 2020
கடற்படை தொழில்நுட்ப மற்றும் மனிதவள பங்களிப்புடன் மற்றொரு நீர் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது
இலங்கையில் கொடிய சிறுநீரக நோயை ஒழிப்பதற்கான தேசிய பணியின் ஒரு பகுதியாக பானம பகுதியில் நிருவப்பட்ட 758 வது நீர் சுத்திகரிப்பு நிலையத்தை கடற்படை இன்று (2020 ஆகஸ்ட் 7) திறந்து வைத்தது.
07 Aug 2020
கேப்டன் ஹர்ஷ டி சில்வா 4 வது துரித தாக்குதல் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்.
கேப்டன் ஹர்ஷ டி சில்வா இன்று (2020 ஆகஸ்ட் 07) இலங்கை கடற்படையின் முதன்மைப் படைப்பிரிவுகளில் ஒன்றான 4 வது துரித தாக்குதல் படைப்பிரிவின் புதிய கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்றார்.
07 Aug 2020
கடற்படைத் தளபதி கடற்படை பொது வைத்தியசாலைக்கு விஜயம்
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன வெலிசர கடற்படை பொது வைத்தியசாலைக்கு 2020 ஆகஸ்ட் 06 அன்று விஜயம் செய்தார். கடற்படைத் தளபதி பதவியேற்ற பின்னர் வெலிசர கடற்படை வைத்தியசாலைக்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.
07 Aug 2020
ரியர் அட்மிரல் முதித கமகே கடற்படை சேவையிலிருந்து விடைபெற்றார்
ரியர் அட்மிரல் முதித கமகே 2020 ஆகஸ்ட் 07 ஆம் திகதி 35 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
07 Aug 2020
கடற்படையின் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விட்டு மேலும் 15 நபர்கள் வெளியேறினர்
பூஸ்ஸ கடற்படை முகாமில் மற்றும் கற்பிட்டி பகுதியில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 15 நபர்கள் இன்று (2020 ஆகஸ்ட் 07) குறித்த மையங்களை விட்டு வெளியேறினர்.
07 Aug 2020
கேப்டன் புத்திக ரூபசிங்க இலங்கை கடற்படைக் கப்பல் சயுரவின் கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார்
இலங்கை கடற்படையின் ஆழ்கடல் கண்கானிப்பு கப்பலான சயுரவின் புதிய கட்டளை அதிகாரியாக (2020 ஆகஸ்ட் 06) அன்று கேப்டன் புத்திக ரூபசிங்க கடமைகளை ஏற்றுக்கொண்டார்.
06 Aug 2020
4 வது துரித தாக்குதல் படைப்பிரிவுக்கு ஒரு மிதக்கும் பேரழிவு மேலாண்மை பயிற்சி பிரிவு
செயல்பாட்டு சேவையிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த முன்னாள் பி 419 துரித தாக்குதல் ரோந்து படகு திருகோணமலை கடற்படை கப்பல்துறை வளாகத்தில் மிதக்கும் பேரழிவு மேலாண்மை பிரிவாக மாற்றிய பின்னர் கிழக்கு கடற்படை கட்டளையின் கட்டளை அதிகாரி 2020 ஆகஸ்ட் 05 ஆம் திகதி 4 வது துரித தாக்குதல் படைப்பிரிவின் பயிற்சி பிரிவுக்கு சடங்கு முறையில் ஒப்படைத்தார்.
06 Aug 2020
கின் நதி பகுதியில் வெள்ள அச்சுறுத்தலைத் தவிர்க்க கடற்படையின் பங்களிப்பு
கடந்த தினங்களில் தொடர்ந்து பெய்த மழை காரணத்தினால், காலி வக்வெல்ல மற்றும் தொடங்கொடை பாலங்களில் சிக்கிக்கிடந்த குப்பைகள் மற்றும் மரத்துண்டுகள் கடற்படையினரால் அகற்றப்பட்டன. குறித்த நடவடிக்கை மூலம் இப்பகுதியில் தாழ்வான பகுதிகளை வெள்ள அபாயத்திலிருந்து மீட்க கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
06 Aug 2020