நிகழ்வு-செய்தி
அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்த 362 கடற்படையினரின் வெளியேறல் அணிவகுப்பு
இலங்கை கடற்படையின் 240 வது நிரந்தர ஆட்சேர்ப்பின் 362 கடற்படை வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து 2020 ஆகஸ்ட் 21 ஆம் திகதி பூஸ்ஸ இலங்கை கடற்படை கப்பல் நிபுனவில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர். இந்நிகழ்விற்கு கடற்படை பணிப்பாளர் நாயகம் பயிற்சி, ரியர் அட்மிரல் ஏ.ஏ,ஆர்.கே பெரேரா பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
22 Aug 2020
வட மத்திய கடற்படை கட்டளையில் புதிதாக கட்டப்பட்ட மத்திய யன்மார் பட்டறை திறக்கப்பட்டன
வட மத்திய கடற்படை கட்டளையில் புதிதாக கட்டப்பட்ட யன்மார் முதன்மை இயந்திர பழுதுபார்க்கும் பட்டறை 2020 ஆகஸ்ட் 18 அன்று இலங்கை கடற்படை கப்பல் பண்டுகாபயவில் வட மத்திய கடற்படை கட்டளைத் தளபதியால் திறந்து வைக்கப்பட்டது.
22 Aug 2020
கடற்படைத் தளபதி கொழும்பு பேராயர் அதி மேதகு மெல்கம் கார்தினல் ரஞ்சித் அருட்தந்தையை சந்தித்தார்
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன இலங்கை கடற்படையின் 24 வது தளபதியாக நியமிக்கப்பட்ட பின் கொழும்பு பேராயர் அதி மேதகு மெல்கம் கார்தினல் ரஞ்சித் அருட்தந்தையை இன்று (2020 ஆகஸ்ட் 21) கொழும்பிலுள்ள அவருடைய உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கடற்படையின் எதிர்கால பணிகளுக்கு ஆசீர்வாதங்களைப் பெற்றார்.
22 Aug 2020
இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியை சந்திப்பு
இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் சஜாத் அலி, தனது பதவிக் காலத்தை நிறைவு செய்யவுள்ள நிலையில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை 2020 ஆகஸ்ட் 20 அன்று கடற்படை தலைமையகத்தில் சந்தித்தார்.
21 Aug 2020
இலங்கையில் உள்ள ரஷ்ய குடியரசு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியை சந்திப்பு
இலங்கையில் உள்ள ரஷ்ய குடியரசு தூதரகத்தின் இராணுவம், விமானம் மற்றும் கடற்படை ஆலோசகராக பணியாற்றும் கர்னல் டென்னிஸ் ஐ ஸ்கோடா அவர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை 2020 ஆகஸ்ட் 20 அன்று கடற்படை தலைமையகத்தில் சந்தித்தார்.
21 Aug 2020
சிவில் பாதுகாப்புத் துறையின் பணிப்பாளர் நாயகம் கடற்படைத் தளபதியை
சிவில் பாதுகாப்புத் துறையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் (ஓய்வு) ஆனந்த பீரிஸ் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை 2020 ஆகஸ்ட் 20 அன்று கடற்படை தலைமையகத்தில் சந்தித்தார்.
21 Aug 2020
63 வது கெடட் ஆட்சேர்ப்புக்கான புதிய அதிகாரிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கப்பட்டன
இலங்கை கடற்படைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 63 வது ஆட்சேர்ப்பின் கெடட் அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் விழா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் 2020 ஆகஸ்ட் 19 ஆம் திகதி அட்மிரல் சோமதிலக திசானநாயக்க ஆடிட்டோரியத்தில் இடம்பெற்றது.
21 Aug 2020
கடற்படையின் பங்களிப்பால் கட்டப்பட்ட வீடொன்று குறைந்த வருமானம் கொண்ட ஒரு குடும்பத்திற்கு வழங்கப்பட்டன
கடற்படையின் மற்றொரு சமூக சேவையாக கடற்படை மனிதவள பங்களிப்புடன் கட்டப்பட்ட முழுமையான வீடொன்று வடமத்திய கடற்படை கட்டளையின் தளபதியால் 2020 ஆகஸ்ட் 17 ஆம் திகதி தலைமன்னார் ஊருமலை பகுதி சேர்ந்த ஒரு குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்திற்கு வழங்கப்பட்டன.
19 Aug 2020
இலங்கையில் உள்ள மாலத்தீவு குடியரசு உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியை சந்திப்பு
இலங்கையில் உள்ள மாலத்தீவு குடியரசு உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் இஸ்மயில் நசீர் (Ismail Naseer) 2020 ஆகஸ்ட் 17 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெத்தேன்னவை சந்தித்தார்.
18 Aug 2020
வடக்கு மற்றும் தெற்கு கடற்கரைகள் கடற்படையின் பங்களிப்பால் சுத்தம் செய்யப்பட்டன
தீவைச் சுற்றியுள்ள கரையோரப் பகுதியை மாசு இல்லாத மண்டலமாக பராமரிக்க கடற்படை பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் படி வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் கடற்கரைகளை கடந்த வாரம் கடற்படையினரால் சுத்தம் செய்யப்பட்டன
17 Aug 2020