நிகழ்வு-செய்தி
பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான ‘PNS ASLAT’ கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இலங்கையை விட்டு புறப்பட்டது

2025 மார்ச் 05 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக இலங்கைக்கு வந்த பாகிஸ்தான் கடற்படையின் போர்க்கப்பலான 'PNS ASLAT' உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு இன்று (2025 மார்ச் 06) இலங்கை கடற்படை கப்பலான சமுதுரவுடன் கூட்டு கடற்படை பயிற்சியினை மேற்கொண்டதன் பின்னர் தீவை விட்டு வெளியேறியதுடன், குறித்த கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் கடற்படையின் பாரம்பரிய முறையில் பிரியாவிடை அளித்தனர்.
06 Mar 2025
ஹொரோவ்பதானை மொரகேவ மகா வித்தியாலயத்தை கற்றலுக்கு உகந்த வளாகமாக திருத்துவதற்கு கடற்படையின் சமூக பணியின் பங்களிப்பு

"க்ளீன் ஶ்ரீ லங்கா" தேசிய திட்டத்துடன் இணைந்து பாடசாலை வளாகங்களை சுத்தம் செய்தல், உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் புனரமைத்தல் ஆகிய தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கடற்படையின் சமூக பராமரிப்பு பங்களிப்புடன் ஹொரோவ்பதானை மொரகேவ மகா வித்தியாலயத்தை சுத்தம் செய்தல் மற்றும் புனரமைக்கும் பணிகள் 2025 மார்ச் 04 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.
06 Mar 2025
இலங்கை கடற்படையினால் காலி கடல்சார் பல்கலைக்கழகத்திற்கு பயிற்சி மாதிரியொன்று வழங்கி வைக்கப்பட்டது

இலங்கை கடல்சார் பல்கலைக்கழகத்தின் காலி பிரதேச மையத்தில் கல்வி கற்கும் பட்டதாரி வேட்பாளர்களின் கல்விக்காக Yamaha 40 HP வெளிப்புற எரிப்பு இயந்திரத்தின் வெட்டு மாதிரியை கையளித்தல் 2025 மார்ச் 04 அன்று தெற்கு கடற்படை கட்டளைத் தளபதியின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
06 Mar 2025
கடற்படையின் தொழிநுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன் குருநாகல் நக்வத்தாகம கனிஷ்ட கல்லூரியில் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் மக்களிடம் கையளிக்கப்பட்டது

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன், Sunshine Foundation for Good மற்றும் Sunshine Holdings Pvt. Ltd. நிறுவனத்தின் நிதிப் பங்களிப்போடு, குருனாகல் மாவட்ட நக்வத்தாகம கனிஷ்ட கல்லூரியில் நிறுவப்பட்ட 1086வது மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் 2025 மார்ச் 04 அன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது.
05 Mar 2025
பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் 'PNS ASLAT' உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது

பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான 'PNS ASLAT' என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக இன்று (2025 மார்ச் 05) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், கடற்படை மரபுப்படி கப்பலை இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.
05 Mar 2025
சீப்புக்குளம், தம்மென்னா வேலுசுமண மகா வித்தியாலயத்தை கற்றலுக்கு உகந்த வளாகமாக திருத்துவதற்கு கடற்படையின் சமூக பணியின் பங்களிப்பு

"க்ளீன் ஶ்ரீ லங்கா" தேசிய திட்டத்துடன் இணைந்து பாடசாலை வளாகங்களை சுத்தம் செய்தல், உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் புனரமைத்தல் ஆகிய தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கடற்படையின் சமூக பராமரிப்பு பங்களிப்புடன் சீப்புக்குளம், தம்மென்னா வேலுசுமண மகா வித்தியாலயத்தை சுத்தம் செய்தல் மற்றும் புனரமைக்கும் பணிகள் 2025 மார்ச் 03 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.
05 Mar 2025
இந்திய கடற்படையின் 'INS KUTHAR' போர்க்கப்பலானது உத்தியோகபூர்வ விஜயமொன்றிற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

இந்திய கடற்படைக்கு சொந்தமான 'INS KUTHAR' போர்க்கப்பலானது உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (2025 மார்ச் 03) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.
03 Mar 2025
ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான 'ASAHI' கப்பலானது தீவில் இருந்து புறப்பட்டது

விநியோகம் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தீவுக்கு வந்த ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் 'ASAHI' என்ற கப்பல், 2025 மார்ச் மாதம் 01 ஆம் திகதி விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்து இன்று (2025 மார்ச் 03) தீவை விட்டு வெளியேறியதுடன், இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் கடற்படையின் மரபுப்படி கப்பலிற்கு பிரியாவிடை அளித்தனர்.
03 Mar 2025
இலங்கை விமானப்படையின் 74வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கை கடற்படையின் வாழ்த்துக்கள்

இலங்கை விமானப்படையானது இன்று (2025 மார்ச் 02) 74வது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடுகின்றது. அதற்காக கடற்படைத் தளபதி உள்ளிட்ட முழு கடற்படையினரும் வாழ்த்துக்களை இலங்கை விமானப்படைக்கு தெரிவிக்கின்றனர்.
02 Mar 2025
கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவினால் தயாரிக்கப்பட்ட LINE THROWING ADAPTER தொகுதிகள் நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன

இலங்கை கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவினால் (Research and Development Unit - RDU) T 56 ஆயுதத்திற்காக தயாரிக்கப்பட்ட Line Throwing Adapter தொகுதிகள் இலங்கை கடற்படைக் கப்பல்களான கஜபாஹு மற்றும் சயுரல ஆகிய கப்பல்களுக்கு கையளித்தல் 2025 பெப்ரவரி 28 அன்று மேற்கு கடற்படை கட்டளைத் தளபதியின் தலைமையில் உத்தியோகபூர்வமாக நடைப்பெற்றது.
02 Mar 2025