நிகழ்வு-செய்தி
அனுராதபுரம், எத்தலகல ஆரண்ய சேனாசனத்தில் கடற்படையால் கட்டப்படவுள்ள ஸ்தூபிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது
அனுராதபுரம், மீகலேவ எத்தலகல ஆரண்ய சேனசனத்தில் ஸ்தூபிக்கான அடிக்கல் நாட்டும் விழா 2020 அக்டோபர் 23 ஆம் திகதி வட மத்திய கடற்படை கட்டளை தளபதியின் தலைமையில் நடைபெற்றது. இந்த ஸ்தூபியின் கட்டுமானப் பணிகள் இலங்கை கடற்படையால் மேற்கொள்ளப்படும்.
26 Oct 2020
அதிமேதகு ஜனாதிபதி தலைமையில் மிஹிந்தலை புனிதப் பகுதியில் புனரமைப்பு பணிகள் தொடங்கிய விழாவில் கடற்படைத் தளபதி கலந்து கொண்டார்.
அனுராதபுரம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மிஹிந்தலை ராஜமஹா விகாரையில் உள்ள மிஹிந்து மகா சேயா, மிஹிந்து குகை மடாலயம் மற்றும் புனித ஆலயத்தின் புனரமைப்பு பணிகளை 2020 அக்டோபர் 24 ஆம் திகதி மதியம் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் தொடங்கப்பட்டதுடன் இந் நிகழ்வுக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும் கழந்து கொன்டார்.
25 Oct 2020
இந்து - லங்கா கடற்படை கூட்டுப்பயிற்சி - SLINEX 2020 கிழக்குக் கடலில் நிறைவடைந்தது.
இந்த மாதம் 19 ஆம் திகதி முதல் கிழக்குக் கடலில் மூன்று நாட்களுக்கு மேல் நடைபெற்ற இலங்கை கடற்படைக்கும் இந்திய கடற்படைக்கும் இடையிலான வருடாந்திர இருதரப்பு கடற்படை கூட்டுப்பயிற்சி - SLINEX 2020 இன்று (2020 அக்டோபர் 21) வெற்றிகரமாக நிறைவடைந்தது.
21 Oct 2020
ஆஸ்திரேலிய அரசு இலங்கை கடற்படைக்கு நான்கு (04) பி.சி.ஆர் சோதனை இயந்திரங்களை வழங்கியது.
ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறை மற்றும் ஆஸ்திரேலிய உள்துறை திணைக்களம் இனைந்து நான்கு (04) பி.சி.ஆர் சோதனை இயந்திரங்களை இலங்கை கடற்படைக்கு 2020 அக்டோபர் 14, ஆம் திகதி கொழும்பில் உள்ள ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து வழங்கியது.
17 Oct 2020
கப்பல்களுக்கு அணுகல்,சோதனை செய்தல் மற்றும் கைது செய்தல் குறித்த பயிற்றுவிப்பாளர் பாடநெறி திட்டம் திருகோணமலையில் நிறைவடைந்தது
போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்துடன் இணைந்து இலங்கையின் சட்ட அமலாக்க நிறுவனங்களில் நபர்களுக்காக நடத்தப்பட்ட கப்பல்களுக்கு அணுகல், சோதனை செய்தல் மற்றும் கைது செய்தல் குறித்த பயிற்றுவிப்பாளர் பாடநெறி திட்டம் 2020 அக்டோபர் 09 ஆம் திகதி திருகோணமலை சிறப்பு படகு படை தலைமையகத்தில் நிறைவடைந்தது.
16 Oct 2020
இலங்கை கடற்படை கப்பல் 'வீரயா' மற்றும் 'ஜகதா' கடற்படை சேவையில் இருந்து விடைபெறுகிறது
இலங்கைக்கு சொந்தமான கடல் மண்டலத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக விலைமதிப்பற்ற சேவையின் பின்னர் கடற்படையில் இருந்து விடைபெறும் இலங்கை கடற்படையின் மூன்றாவது வேக ரோந்து படகுகள் படையின் இலங்கை கடற்படை கப்பல் 'வீரயா' மற்றும் 'ஜகதா' ஆகிய இரண்டு கப்பல்களுக்கு கடற்படை பாரம்பரியமாக மரியாதை செலுத்தி கடற்படை சேவையில் இருந்து அகற்றும் விழா 2020 அக்டோபர் 12 ஆம் திகதி திருகோணமலை கடற்படை கப்பல்துறையில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் நடைபெற்றது.
13 Oct 2020
இலங்கை கடற்படை மரைன் படைப்பிரிவு தலைமையகத்தில் புதிதாக கட்டப்பட்ட அதிகாரி இல்லம் திறக்கப்பட்டது
திருகோணமலை தெற்கு சாம்பூர், இலங்கை கடற்படை கப்பல் விதுர நிருவனத்தில் அமைந்துள்ள இலங்கை கடற்படை மரைன் படைப்பிரிவு தலைமையகத்தில் புதிதாக கட்டப்பட்ட அதிகாரி இல்லம் இன்று (2020 ஆகஸ்ட் 12) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் திறந்து வைக்கப்பட்டது.
12 Oct 2020
ரியர் அட்மிரல் லலித் திஸாநாயக்க கடற்படை சேவையிலிருந்து விடைபெற்றார்
ஏறக்குறைய 34 ஆண்டுகால தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ரியர் அட்மிரல் லலித் திஸாநாயக்க இன்று (2020 அக்டோபர் 08) ஓய்வு பெற்றார்.
08 Oct 2020
வடக்கு மற்றும் தெற்கு கடற்கரைகள் கடற்படையின் பங்களிப்பால் சுத்தம் செய்யப்பட்டன
தீவைச் சுற்றியுள்ள கரையோரப் பகுதியை மாசு இல்லாத மண்டலமாக பராமரிக்க கடற்படை பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் படி 2020 அக்டோபர் 03 மற்றும் 04 திகதிகளில் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் உள்ள கடற்கரைகளை கடற்படையினரால் சுத்தம் செய்யப்பட்டன.
08 Oct 2020
கொழும்பு கோட்டை பிரதான பேருந்து நிலையம் மையப்படுத்தி கடற்படையால் கிருமி நீக்கும் திட்டமொன்று செயல்படுத்தப்பட்டன
பொதுமக்களிடையே கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக இலங்கை கடற்படை இன்று (2020 அக்டோபர் 07) கொழும்பு கோட்டை பிரதான பேருந்து நிலையம் மையப்படுத்தி கிருமி நீக்கும் திட்டமொன்று செயல்படுத்தியது.
07 Oct 2020