நிகழ்வு-செய்தி

N95 முகமூடிகளை கிருமிநாசினி செய்யும் இயந்திரமொன்று கராபிட்டி போதனா வைத்தியசாலைக்கு ஒப்படைக்கப்பட்டது

இலங்கை கடற்படையின் தொழில்நுட்ப நிபுணத்துவத்துடன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்பட்ட N95 முகமூடிகளை மீண்டும் பயன்படுத்துவதற்கான கிருமிநாசினி இயந்திரத்தை, காலி, கராபிட்டி போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு வழங்கும் நிகழ்வு 2020 டிசம்பர் 16 ஆம் திகதி தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் இடம்பெற்றது.

19 Dec 2020

கடற்படையால் கட்டப்பட்ட மற்றொரு நீர் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது

சிறுநீரக நோயை நாட்டிலிருந்து அகற்றுவதற்கான தேசிய முயற்சில் இலங்கை கடற்படை முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் படி இந்த சமூக பொறுப்புணர்வு முயற்சியின் மற்றொரு திட்டமாக, அம்பாரை ஹுலன்னுகே பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 787 வது நீர் சுத்திகரிப்பு நிலையம் 2020 டிசம்பர் 16 ஆம் திகதி பொது மக்களின் பயன்பாட்டிற்காக கடற்படையால் திறந்து வைக்கப்பட்டது.

19 Dec 2020

பயிற்சியை வெற்றிகரமாக முடித்த 62 மத்திய அதிகாரிகள் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் அதிகாரமளிக்கப்பட்டனர்.

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் பயிற்சியளிக்கப்பட்ட இலங்கை கடற்படை கேடட் அதிகாரிகளின் 61 வது ஆட்சேர்ப்பு மற்றும் கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 35 வது ஆட்சேர்ப்பில் சேர்ந்த 62 மத்திய அதிகாரிகளின் அதிகாரமளிப்பு விழா 2020 டிசம்பர் 12 அன்று திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் அழைப்பின் பேரில், வருகை தந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

13 Dec 2020

புதிய பல்நோக்கு ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல் சேவை வளாகம் திறக்கப்பட்டது

திருகோணமலை கடற்படை கப்பல்துறையில் புதிதாக கட்டப்பட்ட புதிய பல்நோக்கு ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல் சேவை வளாகம் (AOPV Stores and Workshop Complex) இன்று (2020 டிசம்பர் 12) திருகோணமலை கடற்படை கப்பல்துறையில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் திறந்து வைக்கப்பட்டது.

12 Dec 2020

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியில் பாடநெறி முடித்த 23 கடற்படை அதிகாரிகள் சான்றிதழ்களைப் பெற்றனர்

சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் பதினான்காம் (14 வது) பாடநெறியில் அதிகாரிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா 2020 டிசம்பர் 11 ஆம் திகதி கொழும்பு தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும் கலந்து கொண்டார்.

12 Dec 2020

கடற்படையின் 70 வது ஆண்டு நிறைவு விழாவிற்கு வெளிநாட்டு கடற்படைத் தளபதிகளின் வாழ்த்துக்கள்

2020 டிசம்பர் 09 அன்று கொண்டாடப்பட்ட இலங்கை கடற்படையின் 70 ஆவது ஆண்டு நிறைவுக்கு, பல வெளிநாட்டு கடற்படைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்புத் தளபதிகள் தங்கள் பாராட்டுக்களை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவுக்கு அனுப்பினர்.

10 Dec 2020

இலங்கை கடற்படை தனது 70 வது ஆண்டு நிறைவு விழாவை பெருமையுடன் கொண்டாடுகிறது

நாட்டின் பெருமைமிக்க வரலாற்றைக் கொண்ட முதல் பாதுகாப்பு வளையமான இலங்கை கடற்படையின் 70 வது ஆண்டு நிறைவு விழா இன்று (டிசம்பர் 9) கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு நிறைவு விழாவின் ஒரு பகுதியாக, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின் கீழ், கடற்படை மரபுகள் மற்றும் மத விவகாரங்களை மையமாகக் கொண்டு ஒவ்வொரு கடற்படை கட்டளையிலும் பரவலான நிகழ்வுகள் நடைத்தப்பட்டன. 70 வது ஆண்டு விழாவை முன்னிட்டு ‘இது உங்கள் கடற்படை, ‘உங்கள் கடற்படையை பற்றி அறிந்து கொள்ளுங்கள்’ என கருப்பொருளின் கீழ் டிசம்பர் 09 முதல் 13 வரை காலி முகத்திடம் முன் கடல் பகுதியில் நடத்தப்படுகின்ற கப்பல் கண்காட்சி மூலம் இந்த கப்பல்களின் வலிமை மற்றும் பங்களிப்பு குறித்து ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

09 Dec 2020

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் 14 வது பாடத்திட்டத்தில் கடற்படைத் தளபதி உரையாற்றினார்.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன இன்று (2020 டிசம்பர் 07) சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் 14 வது பாடத்திட்டத்தில் உரையாற்றினார்.

07 Dec 2020

ரியர் அட்மிரல் விஜித மெத்தெகொட கடற்படை சேவையிலிருந்து விடைபெற்றார்

ஏறக்குறைய 34 ஆண்டுகால தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ரியர் அட்மிரல் விஜித மெத்தெகொட இன்று (2020 டிசம்பர் 04) ஓய்வு பெற்றார்.

04 Dec 2020

இலங்கைக்கான பிரெஞ்சு தூதர் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான பிரெஞ்சு தூதர் எரிக் லெவடு அவர்கள் (Eric LAVERTU), 2020 டிசம்பர் 01 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ருவன் பெரேராவை கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் சந்தித்தார்.

02 Dec 2020