நிகழ்வு-செய்தி

கொவிட் 19 அபாயத்தை எதிர்கொண்டு சுகாதாரத் துறையில் வசதிகளை மேம்படுத்த கடற்படையின் பங்களிப்பு

தற்போதுள்ள கோவிட் 19 அபாயத்தை எதிர்கொண்டு சுகாதாரத் துறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான அரசாங்க திட்டங்களுக்கு ஆதரவாக மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் கோவிட் 19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தேவையான உள்கட்டமைப்பை மேம்படுத்த இலங்கை கடற்படை பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

10 May 2021

கொழும்பு துறைமுக நுழைவாயிலில் விழுந்திருந்த பணப்பையை திருப்பி உரிமையாளரிடம் ஒப்படைத்த கடற்படை வீரர் கடற்படைத் தளபதியால் பாராட்டப்பட்டார்.

2021 ஏப்ரல் 27 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தின் நுழைவாயிலுக்கு முன்னால் சாலையில் விழுந்திருந்த ஒரு பணப்பையும் அதில் உள்ள பணத்தையும் உரிமையாளரிடம் ஒப்படைத்த கடற்படை வீரர் ஏ.ஜி.எச்.எஸ் உதய குமார, எக்ஸ்.எஸ் 100126, வின் இந்த நற்செயலைப் பாராட்டி அவருக்கு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன இன்று (2021 மே 10) கடற்படை தலைமையகத்தில் பாராட்டு கடிதத்தை வழங்கினார்.

10 May 2021

கொவிட் 19 இடைநிலை சிகிச்சை மையமொன்று பூஸ்ஸ கடற்படை தளத்தில் நிறுவப்பட்டது

கொவிட் 19 நோய்த்தொற்ற நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான அரசாங்கத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஆதரவாக, 162 படுக்கைகள் கொண்ட கோவிட் 19 இடைநிலை சிகிச்சை மையமொன்றை 2021 மே 04 ஆம் திகதி காலி, பூஸ்ஸ கடற்படை தளத்தில் நிறுவப்பட்டது.

05 May 2021

கொவிட் 19 இடைநிலை சிகிச்சை மையமொன்று கடற்படையால் கம்பஹ பகுதியில் நிறுவப்பட்டது

கொவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான உள்கட்டமைப்புகள் மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தை வலுப்படுத்தி, கம்பஹ பகுதியில் ஒரு இடைநிலை சிகிச்சை மையமொன்றை நிறுவ 2021 மே 02 ஆம் திகதி கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

04 May 2021

ரியர் அட்மிரல் சஜித் கமகே கடற்படை வெளியீட்டு கட்டளையின் புதிய கொடி அதிகாரியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்

கடற்படை வெளியீட்டு கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சஜித் கமகே 2021 ஏப்ரல் 30 ஆம் திகதி கடற்படை வெளியீட்டு கட்டளை தலைமையகத்தில் கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

01 May 2021

ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா வடக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்

வடக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா இன்று (2021 ஏப்ரல் 30) வடக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

30 Apr 2021

காலி கலந்துரையாடல் 2021 அதிகாரப்பூர்வ வலைத்தளம் வெளியிடப்பட்டது

2021 காலி கலந்துரையாடல் சர்வதேச கடல்சார் மாநாட்டின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் இன்று (2021 ஏப்ரல் 30) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் வெளியிடப்பட்டது.

30 Apr 2021

ரியர் அட்மிரல் பிரசன்ன ஹேவகே தெற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்

தெற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் பிரசன்ன ஹேவகே இன்று (2021 ஏப்ரல் 27) தெற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

27 Apr 2021

செயலிழந்த படகு பாலம் கடற்படையின் உதவியுடன் புதுப்பிக்கப்பட்டது

யாழ்ப்பாணம், புங்குடுதீவில் குரிகட்டுவான் படகுத்துறையில் இருந்து நயனதீவுக்கு பொருட்கள் மற்றும் பயணிகளை கொண்டு செல்ல சாலை மேம்பாட்டு ஆணையத்தால் பயன்படுத்தப்பட்ட படகு பாலம் (Ferry) பல மாதங்களாக செயலற்ற நிலையில் இருந்ததுடன் சமீபத்தில் கடற்படையின் பங்களிப்புடன் புதுப்பிக்கப்பட்டது.

27 Apr 2021

கடற்படை வீரர்களின் நலனுக்காக பல்நோக்கு செயல்பாட்டு மண்டபமொன்று கட்டப்படுகின்றது

அனைத்து கடற்படை வீரர்களின் நலன்புரி வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் அதிநவீன பல்நோக்கு செயல்பாட்டு மண்டபமொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டுதல் இன்று (2021 ஏப்ரல் 25) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் வெலிசர கடற்படை வளாகத்தில் நடைபெற்றது.

25 Apr 2021