நிகழ்வு-செய்தி

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு இலங்கை கடற்படை சிறப்பு நீரிழிவு மருத்துவ சிகிச்சையை நடத்தியது

2025 ஆம் ஆண்டு உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு, கொழும்பு கடற்படை பொது மருத்துவமனை வளாகத்தில் கடற்படை 2025 நவம்பர் 14 ஆம் திகதி சிறப்பு நீரிழிவு மருத்துவ சிகிச்சையை ஏற்பாடு செய்தது.

17 Nov 2025

4வது துரித தாக்குதல் படகு படையில் இணைந்து தாய்நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த வீரமிக்க கடற்படை வீரர்களுக்கு அஞ்சலி

இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இலங்கை கடற்படையின் 4வது துரித தாக்குதல் படகு படையில் சேவையில் இருந்தபோது தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த வீரமிக்க கடற்படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வானது 2025 நவம்பர் 14 ஆம் திகதி திருகோணமலை கடற்படை கப்பல்துறை தலைமையகத்தில் அமைந்துள்ள போர்வீரர்கள் நினைவுச்சின்னத்தில் நடைபெற்றது. இதில் வீரமிக்க போர்வீரர்களின் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

17 Nov 2025

கடற்படை விரைவு அதிரடி படகுகள் படை தலைமையகத்தில் மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணப் பயிற்சி அமர்வு - 2025 ஆனது வெற்றிகரமாக நிறைவடைந்தது

புத்தளம், கங்கேவாடியவில் உள்ள கடற்படை விரைவு அதிரடி படகுகள் படை தலைமையகத்தில் உள்ள அனர்த்த முகாமைத்துவ பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்ற மூன்று (03) நாள் மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணப் பயிற்சி அமர்வானது, கூட்டு நடைமுறைப் பயிற்சிகளைத் தொடர்ந்து 2025 நவம்பர் 14 ஆம் திகதி அன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது.

15 Nov 2025

கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கும் ஒரு வலுவான கூட்டுத் திட்டத்திற்காக கடற்படை, அரசு நிறுவனங்கள் மற்றும் வடமேற்கு மாகாண மீனவ சமூகம் இணைந்து செயல்படுகின்றது

கடல் சூழலில் நிலையான மீன்வளம் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பிற்கான கூட்டு அணுகுமுறைக்காக; வடமேற்கு கடற்படை கட்டளைத் தளபதியின் தலைமையில், புத்தளம், இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னியில், 2025 நவம்பர் 11 ஆம் திகதி வடமேற்கு மாகாணத்தின் பிரதேச செயலகங்கள், மீன்வள மற்றும் நீர்வளத் துறை, இலங்கை பொலிஸ் துறை, சுங்கத் துறை, வனவிலங்கு பாதுகாப்புத் துறை, கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மைத் துறை, மத்திய சுற்றுச்சூழல் ஆணையம், வனப் பாதுகாப்புத் துறை மற்றும் வடமேற்கு மாகாண மீனவர் சங்கத்தின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன், குறிப்பிட்ட பொருள் சார்ந்த யோசனைகள், திட்டங்கள் குறித்த அமர்வு நடைபெற்றது.

15 Nov 2025

மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணப் பயிற்சி அமரடவானது 2025 விரைவு அதிரடி படகு படை தலைமையகத்தில் ஆரம்பமாகிறது

மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணப் பயிற்சி அமரடவானது 2025 நவம்பர் 12 ஆம் திகதி புத்தளம், கங்கே வாடியவில் உள்ள கடற்படை விரைவு அதிரடி படகு படை தலைமையகத்தில் உள்ள அனர்த்த முகாமைத்துவ பயிற்சிப் பாடசாலையில் ஆரம்பமானது.

13 Nov 2025

75 வது கடற்படை ஆண்டு நிறைவை முன்னிட்டு, ரபேவ சிறி தேவமித்த தொடக்கப்பள்ளியை சுத்தம் செய்ய கடற்படை சமூக பராமரிப்பு பங்களிப்பை வழங்கியது

இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 75 வது கடற்படை ஆண்டு நிறைவை முன்னிட்டு, "க்ளீன் ஶ்ரீ லங்கா" தேசிய திட்டத்தின் கீழ், பள்ளி வளாகங்களை சுத்தம் செய்தல் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான தேசிய திட்டத்தின் கீழ், அனுராதபுரம், ரபேவ சிறி தேவமித்த தொடக்கப்பள்ளியை சுத்தம் செய்வதற்கான கடற்படையின் சமூக சேவை பங்களிப்பு 2025 நவம்பர் 08 ஆம் திகதி வழங்கப்பட்டது.

13 Nov 2025

கடற்படை சிறப்பு படகு படை அதன் 32 வது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடியது

இலங்கை கடற்படையின் சிறப்பு படகு படைபிரிவின் பெருமைமிக்க 32 வது ஆண்டு விழா, திருகோணமலையில் உள்ள சிறப்பு படகு படைப்பிரிவு தலைமையகத்தில், படைப்பிரிவின் கட்டளை அதிகாரி அவர்களின் தலைமையில் 2025 நவம்பர் 06 ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது.

13 Nov 2025

இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளுக்கு இடையிலான 35வது சர்வதேச கடல்சார் எல்லைக் கூட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது

இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளுக்கு இடையிலான 35வது சர்வதேச கடல்சார் எல்லைக் கூட்டம் (International Maritime Boundary Line meeting), காங்கேசன்துறைக்கு வடக்கே இந்திய-இலங்கை கடல் எல்லையில் இந்திய கடற்படையின் INS Sukanya கப்பலில் 2025 நவம்பர் 11 அன்று வெற்றிகரமாக நடைபெற்றது.

12 Nov 2025

75வது கடற்படை ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற மாலுமிகளின் நட்புரீதியான ஒன்றுக்கூடல் கடற்படை மரபுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு நடைபெற்றது

இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 75 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் கடற்படை மரபுகள் மற்றும் சர்வ மத மரபுகளுக்கு ஏற்ப தொடர்ச்சியான நிகழ்ச்சிகளை கடற்படை ஏற்பாடு செய்துள்ளது. இந்தத் தொடரில் மாலுமிகளின் நட்புரீதியான ஒன்றுகூடல் இன்று (2025 நவம்பர் 07) வெலிசரவில் உள்ள ‘Wave N’ Lake’ கடற்படை உற்சவ மண்டபத்தில் நடைபெற்றது.

08 Nov 2025

கடற்படையால் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையமானது பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டது

கடற்படையின் சமூக சேவை திட்டத்தின் கீழ் மாத்தளை மாவட்டத்தின் கலேவல பிரதேச செயலகப் பிரிவில் உள்ள க/ மெதபெத்த மகா வித்தியாலயத்தில் நிறுவப்பட்ட மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் 2025 அக்டோபர் 31 அன்று பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டது.

04 Nov 2025