நிகழ்வு-செய்தி

CARAT - 2023 இருதரப்பு பயிற்சியின் கீழ் மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரணப் பயிற்சிகள் தொடங்கியது

CARAT– 2023 இருதரப்பு பயிற்சியின் கீழ் மரைன் பயிற்சி (Marine Exercise - MAREX) 2023 ஜனவரி 21 ஆம் திகதி அமெரிக்க மரைன் படைப்பிரிவு, இலங்கை கடற்படை மரைன் படைப்பிரிவு, கடற்படை சிறப்பு படகுகள் படையணி, கடற்படை விரைவு அதிரடி கைவினைப் படையணி மற்றும் கடற்படை காலாட்படையணி ஆகியவை இணைந்து முள்ளிக்குளத்தில் தொடங்கியதுடன் அதன் மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரணப் பயிற்சிகள் (Humanitarian Assistance & Disaster Relief) இன்று (2023 ஜனவரி 22) வடமேற்கு கடற்படைக் கட்டளையின் முள்ளிக்குளம் கடற்கரையில் நடைபெற்றது.

22 Jan 2023

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் மற்றும் வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ஆகியோருக்கிடையில் சந்திப்பு

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் திரு.தரிக் எம்டீ அரிபுல் இஸ்லாம் (Tareq Md Ariful Islam) அவர்கள் இன்று (2023 ஜனவரி 22) வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் அருண தென்னகோண் அவர்களை வடக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

22 Jan 2023

CARAT - 2023 இருதரப்பு பயிற்சியின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற மரைன் பயிற்சி முள்ளிகுளத்தில் ஆரம்பமானது

அமெரிக்க கடற்படையின் பசிபிக் கப்பல்கள் குழுவினால் நடத்தப்படுகின்ற 2023 ஆம் ஆண்டிற்கான, CARAT– 2023 இருதரப்பு பயிற்சியின் மரைன் பயிற்சி (Marine Exercise - MAREX) இன்று (2023 ஜனவரி 21) இலங்கை கடற்படை கப்பல் பரண நிருவனத்தின் கட்டளை அதிகாரி கேப்டன் சஞ்சீவ கொடிகார மற்றும் அமெரிக்க நான்காவது மரைன் படைப்பிரிவின் இரண்டாம் படையணியின் கட்டளை அதிகாரி கேப்டன் ஷான் மந்த்ராயர் (Captain Shan Mandrayar) ஆகியோரின் தலைமையில் ஆரம்பமானது.

21 Jan 2023

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் மற்றும் வடமத்திய கடற்படை கட்டளைத் தளபதி ஆகியோருக்கிடையில் சந்திப்பு

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் திரு.தரிக் எம்டீ அரிபுல் இஸ்லாம் (Tareq Md Ariful Islam) அவர்கள் இன்று (2023 ஜனவரி 21) வட மத்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பிரசாத் காரியப்பெரும அவர்களை வட மத்திய கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

21 Jan 2023

CARAT–2023 இருதரப்பு பயிற்சிக்காக கொழும்பில் தொடர் இசை நிகழ்ச்சிகள்

அமெரிக்க கடற்படையின் பசிபிக் கப்பல்கள் குழுவினால் நடத்தப்படுகின்ற 2023 ஆம் ஆண்டிற்கான ஒத்துழைப்பு தயார்நிலை மற்றும் பயிற்சி பற்றிய (Cooperation Afloat Readiness and Training Exercise - CARAT–2023) இருதரப்பு பயிற்சி 2023 ஜனவரி 19 ஆம் திகதி தொடங்கப்பட்டது. பயிற்சியுடன், பங்குதாரர்களிடையே கலாச்சார பரிமாற்றத்தின் மூலம் ஒத்துழைப்பைக் கட்டியெழுப்புவதற்காக, அமெரிக்க 7வது கப்பல் குழுவின் இசைக்குழுவும் இலங்கை கடற்படை இசைக்குழுவும் கொழும்பில் தொடர்ச்சியான இசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளன, மேலும் இதன் முதல் இசை நிகழ்ச்சி 2023 ஜனவரி 20, அன்று மாலை கொழும்பு கலங்கரை விளக்க வளாகத்தில் நடைபெற்றது.

21 Jan 2023

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் அட்மிரல் ஒப் த ஃப்ளீட் வசந்த கரன்ணாகொட ஆகியோருக்கிடையில் சந்திப்பு

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா இன்று (2023 ஜனவரி 20) அட்மிரல் ஒப் த ஃப்ளீட் வசந்த கரன்ணாகொடவை கொழும்பு, எத்துல் கோட்டேவில் சந்தித்தார்.

21 Jan 2023

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மற்றும் கடற்படைத் தளபதிக்கு இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு

இலங்கைக்கான நியூசிலாந்தின் உயர்ஸ்தானிகர் திரு. மிச்செல் அப்பிள்டனுக்கும் (Michael Appleton) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவுக்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திபொன்று இன்று (2023 ஜனவரி 20) கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.

20 Jan 2023

யாழ்ப்பாணம் மண்டைதீவு றோமன் கத்தோலிக்க கல்லூரியில் கடற்படையால் நிர்மாணிக்கப்பட்ட கேட்போர் கூட கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது

கடற்படையின் தொழிநுட்ப பங்களிப்புடன், யாழ்ப்பாணம் மண்டைதீவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட றோமன் கத்தோலிக்க கல்லூரியின் கேட்போர் கூட கட்டிடம் 2023 ஜனவரி 19 ஆம் திகதி யாழ்ப்பாண ஆயர் வணக்கத்திற்குரிய கலாநிதி ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தலைமையில் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

20 Jan 2023

இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் விகாஸ் சூட் (Captain Vikas Sood) இன்று (2023 ஜனவரி 09) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.

09 Jan 2023

கடற்படையினரின் பங்களிப்புடன் யாழ்ப்பாணம் காரைநகரில் நடைபெற்ற 03வது உயிர்காக்கும் பயிற்சி நெறியில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை உயிர்காக்கும் சங்கம், நார்த்விண்ட் திட்ட நிறுவனம் இணைந்து யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் நடத்திய மூன்றாவது (03) உயிர்காக்கும் பாடநெறியை வெற்றிகரமாக முடித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எட்டு (08) இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வடக்கு கடற்படை கட்டளையின் பிரதித் தளபதி கொமடோர் பிரியால் விதானகேவின் தலைமையில் 2023 ஜனவரி 06 ஆம் திகதி காரைநகர் ஃபோர்ட் ஹம்மன்ஹில் உணவகத்தில் நடைபெற்றது.

07 Jan 2023