நிகழ்வு-செய்தி
கடற்படைத் தளபதி வட மத்திய கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்
வட மத்திய கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெதென்ன 2022 பெப்ரவரி 12 ஆம் திகதி வட மத்திய கடற்படை கட்டளையின் செயற்பாட்டுத் தயார்நிலை மற்றும் நிர்வாகச் செயற்பாடுகளை மேற்பார்வையிட்டார்.
13 Feb 2022
இலங்கைக்கான புதிய பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
இலங்கைக்கான புதிய பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், மேஜர் ஜெனரல் (ஓய்வு) உமர் பாரூக் புர்கி (Umar Farooq Burki) இன்று (2022 பெப்ரவரி 10) கடற்படைத் தலைமையகத்தில் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தார்.
10 Feb 2022
கடற்படையின் அதிகாரப்பூர்வ இணையதளம் மிகவும் பிரபலமான அரசாங்க இணையதளமாக விருது பெற்றது
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ‘Best Web 2021' போட்டியின் விருது வழங்கும் விழா 2022 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் திகதி LK Domain Registry நிருவனத்தில் நடைபெற்றதுடன் இலங்கை கடற்படையின் 'www.navy.lk' உத்தியோகபூர்வ இணையத்தளம் மிகவும் பிரபலமான இணையத்தளமாகத் அங்கு தெரிவுசெய்யப்பட்டது. அத்துடன் சிறந்த இணையத்தளங்கள் அரசாங்கப் பிரிவில் மூன்றாம் இடத்தையும் வென்றது. இவ்விருது வழங்கும் நிகழ்வில் பெறப்பட்ட விருதுகள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களிடம் 2022 பெப்ரவரி 08 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
09 Feb 2022
மன்னார் பிரதேசம் மற்றும் அதன் பல்லுயிரியம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி
மன்னார் பகுதி, அதன் பல்லுயிர் மற்றும் புலம்பெயர்ந்த பறவைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சம்பத் செனவிரத்னவினால் 2022 பெப்ரவரி 5 ஆம் திகதி வட மத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்மென்னா நிறுவனத்தில் நடத்தப்பட்டது
08 Feb 2022
25 துப்பாக்கி சூடு மரியாதையுடன் இலங்கை கடற்படை 74 வது சுதந்திர தினத்தன்று தேசத்திற்கு மரியாதை செலுத்தியது
74 வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு மரியாதையுடன் தேசத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு இன்று (2022 பிப்ரவரி 04) இலங்கை கடற்படை கப்பல் கஜபாஹுவில் மதியம் 12.00 மணியளவில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை கடற்படை கப்பல் கஜபாஹுவின் கட்டளை அதிகாரி கேப்டன் மாலன் பெரேராவின் தலமையில் இடம்பெற்றது.
04 Feb 2022
74 வது சுதந்திர தின விழாவில் இலங்கை கடற்படை பெருமையுடன் பங்கேற்கிறது
74 ஆவது சுதந்திர தின விழா இன்று (2022 பெப்ரவரி 04) இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தலைவரும், ஆயுதப்படைகளின் தளபதியுமான அதிமேதகு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றதுடன் இவ் நிகழ்வில் கடற்படை பெருமையுடன் பங்கேற்றது.
04 Feb 2022
இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்த பங்களாதேஷ் கடற்படை தளபதி இலங்கை விட்டு புறப்பட்டார்
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2022 ஜனவரி 18 ஆம் திகதி இலங்கை வந்துள்ள பங்களாதேஷ் கடற்படை தளபதி அட்மிரல் எம் ஷஹீன் இக்பால் (Admiral, M Shaheen Iqbal) அவர்கள் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து இன்று காலை (2022 ஜனவரி 23) இலங்கை விட்டு புறப்பட்டார்.
23 Jan 2022
ரியர் அட்மிரல் சமன் பெரேரா கடற்படை ஏவுகணை கட்டளையின் புதிய கொடி அதிகாரியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்
கடற்படை ஏவுகணை கட்டளையின் புதிய கொடி அதிகாரியாக ரியர் அட்மிரல் சமன் பெரேரா 2022 ஜனவரி 20 ஆம் திகதி திருகோணமலை கடற்படை கப்பல்துறை வளாகத்தில் உள்ள கடற்படை வெளியீட்டு கட்டளை அலுவலகத்தில் வைத்து கடமைகளை ஏற்றுக்கொண்டார்.
21 Jan 2022
இலங்கை தொண்டர் கடற்படையின் வருடாந்த முகாம் வெற்றிகரமாக நிறைவு
இலங்கை தொண்டர் கடற்படையின் வருடாந்த முகாம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் இன்று (2022 ஜனவரி 20) வெலிசர இலங்கை கடற்படை கப்பல் லங்கா நிருவனத்தில் இடம்பெற்றது.
20 Jan 2022
பங்களாதேஷ் கடற்படை தளபதி இலங்கை கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2022 ஜனவரி 18 ஆம் திகதி இலங்கை வந்துள்ள பங்களாதேஷ் கடற்படை தளபதி அட்மிரல் எம் ஷஹீன் இக்பால் (Admiral, M Shaheen Iqbal) இன்று (2022 ஜனவரி 19) கடற்படைத் தலைமையகத்தில் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தார்.
19 Jan 2022